ஆரோக்கிய உணவு

ஒரு வயசு வரை குழந்தைக்கு மறந்தும் கூட இந்த உணவுகளை கொடுக்காதீங்க -தெரிஞ்சிக்கங்க…

குழந்தைகள் பிறந்த முதல் 6 மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே போதுமான உணவாகும். குழந்தை பிறந்த முதல் வருடம் பெற்றோர்களுக்கு ஒரு பெரிய சாதனையாக தான் தெரியும். ஆனால் இப்போது தான் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். முக்கியமாக குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கிறோம் என்பதில் கவனமாக இருங்கள்.

மாட்டின் பால் அல்லது சோயா பால் போன்றவை குழந்தைகளுக்கு செரிமானமாவது மிகவும் சிரமமான ஒன்றாகும். பால்களில் உள்ள புரோட்டின் மற்றும் மினரல்கள் குழந்தையின் சிறுநீரகத்தை பாதிக்கும் அபாயமும் உள்ளது.

178285955615fbfd7261557ddf07ea533b82035a81265877257599137551

ஸ்ட்ராபெர்ரிகள், ப்ளூ பெர்ரி, பிளாக் பெர்ரி ஆகியவற்றில் அதிகளவு புரோட்டின் உள்ளது. இவை குழந்தைக்கு எளிதில் செரிமானமாகாது.

திராட்சை மற்றும் ஆரஞ்ச் போன்ற பழங்களில் அதிகமாக அமில தன்மை உள்ளது.

தேன் என்பது பாக்டீரியாக்களின் ஆதாரமாக உள்ளது. இது குழந்தைகளுக்கு மலச்சிக்கலை உண்டாக்குகிறது.

பினட் பட்டர் நிலக்கடலையில் இருந்து பெறப்படுவதாகும். இந்த பினட் பட்டரும் கூட குழந்தைகளுக்கு அலர்ஜியை உண்டாக்க கூடியதாக இருக்கிறது.

கீரைகள், பீட்ரூட் போன்றவற்றில் லேக்டோஸ் அளவு அதிகமாக உள்ளது. இது ஒரு வயதிற்குள் இருக்கும் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான உணவாகும்.

குழந்தைகளுக்கு ஒரே ஒரு கிராம் உப்பு என்பது ஒரு நாளைக்கு போதுமானதாக உள்ளது. உங்களது தாய்ப்பாலிலேயே குழந்தைக்கு தேவையான உப்பு இருக்கிறது. எனவே உப்பு கலந்த பொருளை குழந்தைகளுக்கு கொடுக்காதீங்க.

பாதாம், முந்திரி என ஒட்டுமொத்த நட்ஸ் வகை நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஆபத்தை கூட குழந்தைகளுக்கு கொடுக்கும்

அனைத்து குழந்தைகளுக்குமே சாக்லேட் என்றால் மிக மிக பிடிக்கும். ஆனால் சாக்லேட்டில் உள்ள காஃபின் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான ஒன்றாகும். இதில் மட்டுமல்ல பால் பொருட்களும் குழந்தைகளுக்கு சேராது.

பாப் கார்ன் மொருமொருப்பாகவும் ஒரு ஆரோக்கியமான நொறுக்கு தீனியாகவும் உள்ளது. ஆனால் இது குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது ஆகும். 12 மாதத்திற்கு குறைவான குழந்தைக்கு தயவு செய்து பாப்கார்ன் கொடுக்க வேண்டாம்.

முட்டை காலையில் சாப்பிட மிகவும் ஏற்ற உணவாக இருக்கிறது. ஆனால் முட்டையின் வெள்ளைக்கருவானது குழந்தைக்கு அலர்ஜுயை கொடுக்க கூடியதாக உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button