சிற்றுண்டி வகைகள்

கேழ்வரகு ஸ்டப்டு இட்லி

இட்லி என்றால் அரிசி, உளுந்து போட்டு அரைத்து எப்பொழுதும் ஒரே மாதிரியாகத் தான் செய்கின்றோம். அதற்கு பதிலாக சற்று வித்தியாசமாக, அதே சமயம் ஆரோக்கியமான ஒரு இட்லியை செய்து சாப்பிட நினைத்தால் கேழ்வரகு ஸ்டப்டு இட்லியை செய்யுங்கள்.

இங்கு அந்த கேழ்வரகு ஸ்டப்டூ இட்லியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!


26 1432613134 ragistuffedidli
தேவையானப் பொருட்கள்:

கேழ்வரகு மாவு – 1/2 கிலோ
உளுந்து – 200 கிராம்
கொண்டைக்கடலை – 100 கிராம்
வெல்லம் – சிறிதளவு
வரமிளகாய் – 4
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அடுத்ததாக கேழ்வரகு மாவில் உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரந்துக் கொள்ளவேண்டும்.

பிறகு இந்த இரண்டு கலவையையும் ஒன்றாக சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை முதல் நாள் இரவே செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

கொண்டைக்கடலையை முதல் நாள் இரவு ஊற வைத்து, மறுநாள் அதனை வேக வைத்து வடிகட்டி அத்துடன் மிளகாய், வெல்லம், உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்தில் அரைத்து வைத்து கொள்ள வேண்டும்.

இறுதியாக, இட்லித் தட்டில் எண்ணெய் தடவி முதலில் கேழ்வரகு, உளுந்து மாவு கலவையை 1/2 கரண்டி விட்டு அதன் மேல் 1/4 கரண்டி கொண்டைக்கடலை கலவையை விட்டு, மீண்டும் கேழ்வரகு, உளுந்து மாவு கலவையை 1/4 கரண்டி விட்டு இட்லியை வேக வைத்து எடுத்தால் சுவையான கேழ்வரகு ஸ்டப்டு இட்லி ரெடி….

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button