முகப் பராமரிப்பு

‘பளீச்’ஜொலிப்புக்கு வீட்டிலேயே தீர்வு

தன்னம்பிக்கை தரும் அழகு…..

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். ஒருவரின் உள்ளத்தின் எண்ணங்களை பிரதி பலிப்பதாக முகத் தோற்றம் உள்ளது. ஆனால் ஒருவரது முகத்தோற்றத்தை வைத்து அவர்களின் திறமையை எடை போட முடியாது என்றாலும் பெரும்பாலான பெண்களுக்கு தங்களது பிரகாசமான முகத் தோற்றமே தன்னம்பிக்கை தரும் விஷயமாகவும் உள்ளது ஆனால் தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்கள் வீட்டு வேலைகளை முடித்து அலுவலகம் செல்கின்றனர்.

பின்னர் பணி முடித்து இரவு வீடு திரும்புகின்றனர். இவர்களால் வெளியில் சென்று பேஷியல் போன்ற அழகு தொடர்பான விஷயங்களில் ஈடுபட முடிவதில்லை. இதனால் முகம் களையிழந்து, உற்சாகமின்றி காணப்படுகின்றனர். இதனை தவிர்க்க வீட்டிலேயே பயன்படுத்தும் பொருட்களை கொண்டு எளிய முறையில் செய்து கொள்ளும் சில அழகு குறிப்புகள்.

ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து , பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும். வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து முகத்தில் பூசி 20 நிமிடம் ஊறவைத்து குளித்தால், வேர்க்குரு வராத தோடு, வெயிலில் கருத்துப் போகாமல் இருக்கும்.

இரவு உறங்க செல்லு முன், இரண்டு தேக்கரண்டி புதினா சாறு, அரைமூடி எலுமிச்சம்பழம் சாறு ஆகியவற்றுடன் பயித்தம் பருப்புமாவை கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஐஸ் கட்டி எடுத்து ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்படும் தழும்பு மறையும். பப்பாளிப்பழத்தை அரைத்து சிறிதளவு தேன், பால் சேர்த்து முகத்தில் பூசி சிறிது நேரம் ஊற வைத்து கழுவினால் முகம் பளிச்சென இருக்கும்.

திராட்சை பழச்சாற்றை பிழிந்து எடுத்த பின் மீதம் உள்ள சக்கையை தூக்கி போடாமல் அதை அரைத்து முகத்தில் ஒரு மாஸ்க் போன்றுபூசி சிறிது நேரத்திற்கு பின் கழுவ வேண்டும். திராட்சை சாற்றில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளது. இது சருமத்தை சுத்திகரித்து ரத்தத்தில் உள்ள பேலட்ஸ்களை அதிகப்படுத்தி சருமம் புதிதாகவும், சுத்தமாகவும் மாற்றுகின்றது. ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சமஅளவு எடுத்து, கலந்து முகத்தில் தேய்த்து சற்று நேரம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.
ld2287
இதன் மூலம் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும். சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க, 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1/2 ஸ்பூன் பால் பவுடர், 1/2 ஸ்பூன் பார்லி பவுடர் பால் கலந்து முகத்தில் தேய்க்க வேண்டும். புதினா சாறு-1 டீ ஸ்பூன், வறுத்து அரைத்த உளுத்தம் பொடி-1 டீஸ்பூன், சந்தனம்- கால் டீஸ்பூன் ஆகியவற்றைக் கலந்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பருக்களின் மேல் இந்த பேஸ்ட்டைப் பூசி, உலர்ந்ததும் கழுவ வேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்த சிகிச்சையைத் தொடர்ந்து செய்து வந்தால் பருக்கள் உதிர்ந்து, முகம் பளிங்கு போல் ஆகிவிடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button