ஆரோக்கிய உணவு

தண்ணீர் பாட்டில் வாங்கும் போது நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

நாம் வாங்கும், பயன்படுத்தும் அனைத்து தண்ணீர் பாட்டில்களும் ஒரே வகையிலான பிளாஸ்டிக் பொருட்களால் தயாரிக்கபடுவதில்லை. நாம் விலையில் மட்டுமே மாற்றங்களை காண்கிறோம். ஆனால், அதன் பின்னணியில் இருக்கும் தரத்திலும் நிறைய மாற்றங்கள் இருக்கின்றன.

 

இந்த மாற்றங்கள் தான் நமது உடல் நலத்திற்கு பெரும் அபாயமாக அமைகின்றன. ஆம், ஒருசில பிளாஸ்டிக் பொருட்கள் நாற்காலி, டிவி போன்றவை தயாரிக்க தான் பயன்படுத்த வேண்டும். ஒருசில பிளாஸ்டிக் பொருட்கள் தான் தண்ணீர் பாட்டில் தயாரிக்க பயன்படுத்த வேண்டும்.

எந்தெந்த பிளாஸ்டிக் உகந்தது, தீயது என்பதை அதில் இருக்கும் குறியீட்டு எழுத்துக்களை வைத்து கண்டறியலாம்…

 

PET / PETE
பெரும்பாலான பொருட்கள் இந்த வகை பிளாஸ்டிக்கில் தான் தயாரிக்கப்படுகின்றன. தண்ணீர் பாட்டில், கூல் ட்ரிங்க்ஸ் சில பேக்கேஜ் போன்றவைகளில் இந்த பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகின்றன. இது ஒருமுறை மட்டும் பயன்படுத்த வேண்டிய பிளாஸ்டிக் பொருளாகும்.

மீண்டும், மீண்டும் இதை பயன்படுத்துவதால் பாக்டீரியா வளர்ச்சி அதிகமாகும் அபாயம் இருக்கிறது. இது மிகையான நச்சுத்தன்மை உடையது என்பது குறிப்பிடத்தக்கது.

 

HDP / HDPE
எச்.டி.பி வகை கடினமான பிளாஸ்டிக் பால் ஜக் (Jug), டிட்டர்ஜன்ட், எண்ணெய் பாட்டில்கள், பொம்மைகள் மற்றும் பிளாஸ்டிக் பேக் போன்றவை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை பிளாஸ்டிக்கில் எந்த இரசாயன வெளிபாடுகளும் இருப்பதில்லை.

இந்த வகை பாட்டில்களில் நீர் பிடித்து குடிப்பது தவறில்லை, இவை பாதுகாப்பானவை. எனவே, இந்த சீல் உள்ள பாட்டில்களை தண்ணீர் குடிக்க பார்த்து வாங்குங்கள்.

 

PVS / 3V
மிருதுவான, வளைந்துக் கொடுக்கும் பிளாஸ்டிக். உணவுப் பொட்டலங்களை கட்டுவதற்கு, சிலவகை குழந்தைகள் பொம்மை, போன்றவை தயாரிக்க இந்த பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து இரண்டு வகையான நச்சுத்தன்மை உள்ளது.

இந்த நச்சுக்கள் உடலின் ஹார்மோன்களை பாதிக்கவல்லது. எனவே, இதை தவிர்ப்பது நல்லது என ஆராய்ச்சியாளர்கள் அறிவுரைக்கின்றனர்.

 

LDPE
தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்க இந்த பிளாஸ்டிக் வகை பயன்படுதவே கூடாது. இது எந்த கெமிக்கலும் வெளிப்படுத்துவதில்லை எனிலும் கூட, இந்த பிளாஸ்டிக் பொருட்களில் உணவுகள், பானங்கள் அடைத்து பருகுவது உடலில் நச்சுத்தன்மை அதிகரிக்க பெரும் காரணமாக இருக்கிறது.

 

PP
வெள்ளை அல்லது பாதி ட்ரான்ஸ்பர் நிறத்தில் இருக்கும் இந்த பிளாஸ்டிக் மருந்துகள் மற்றும் தயிர் போன்றவை அடைக்க பயன்படுத்தப்படுகின்றன. இது எடையில் மிகவும் குறைவானது. இது சூட்டை தாங்கும் தன்மை உடையது. சூடு செய்தால் இவை வேகமாக உருகாது.

 

PS
பாலீஸ்டிரின் (PS) மிகவும் விலை அதிகமான, எடை குறைவான பிளாஸ்டிக். பானம் குடிக்கும் கப், உணவுகள் அடைப்பதற்கு, முட்டை அடுக்கி வைக்க என பல்வேறு பயன்பாட்டிற்கு இது உபயோகப்படுகிறது. இதை நீண்ட காலம் மீண்டும், மீண்டும் பயன்படுத்த கூடாது.

 

PC / பெயரிடப்படாத பிளாஸ்டிக்
ஸ்போர்ட்ஸ் தண்ணீர் பாட்டில், உணவு பொருட்கள் அடைப்பதற்கு இவை பயன்படுத்தப்படுகின்றன. இது ஒருவகையான மிகவும் அபாயாமான பிளாஸ்டிக் ஆகும். இது மறுசுழற்சிக்கு உகந்தது அல்ல.

இது, உணவு பொருட்கள் அடைக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்க தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் (BPA) கலப்பு கொண்டுள்ளது ஆகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button