ஆரோக்கிய உணவு

வாழைப்பழத்தை ஏன் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது-ன்னு சொல்றாங்க தெரியுமா?தெரிந்துகொள்வோமா?

ஒரு நாளில் காலை உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அப்படி காலை உணவின் போது சாப்பிட வேண்டிய உணவுகள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டியது அவசியம். ஆரோக்கியமான உணவுகளின் பட்டியலில் பழங்களை எடுத்துக் கொண்டால், பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் ஓர் பழம் என்றால் அது வாழைப்பழம். அதோடு இது எளிதில் கையில் கொண்டு செல்லும் வகையில் இருப்பதோடு, இதை கழுவித் தான் சாப்பிட வேண்டும் என்ற அவசியமும் இல்லை. மேலும் வாழைப்பழம் வருடம் முழுவதும் கிடைக்கும் பழமும் கூட.

ஆனால் இந்த பழத்தை காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது என்று பலர் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இது உண்மை தானா? ஏன் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது என்பன போன்ற பல கேள்விகளுக்கான விடையை இக்கட்டுரையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

வாழைப்பழம் ஏன் ஆரோக்கியமானது?

வாழைப்பழத்தில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. இந்த பழம் இதய ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் மற்றும் உடல் சோர்வைக் குறைக்கும். அதுமட்டுமின்றி இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கும், மன இறுக்கத்தைக் குறைக்கும், மலச்சிக்கல், நெஞ்செரிச்சல் மற்றும அல்சர் போன்றவற்றைத் தடுத்து, உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். முக்கியமாக வாழைப்பழத்தில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால், இது ஹீமோகுளோபின் உற்பத்தியைத் தூண்டிவிட்டு, இரத்த சோகையைக் குணப்படுத்த உதவும். ஆனால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளை வழங்கும் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடலாமா கூடாதா என்ற விவாதம் இன்னும் உள்ளது.

உடனடி ஆற்றலை வழங்கும்

வாழைப்பஙத்தில் பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் வளமான அளவில் உள்ளதால், இது உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களின் தேவையை பூர்த்தி செய்கிறது. எனவே தினமும் வாழைப்பழத்தை கட்டாயம் சாப்பிட வேண்டும். முக்கியமாக வாழைப்பழம் உடலுக்கு ஆற்றலை வழக்குகிறது மற்றும் பசியுணர்வைக் குறைக்கிறது.

ஒரு வாழைப்பழத்தில் உள்ள 25 சதவீத சர்க்கரை, அன்றாட செயல்களை செய்வதற்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. அதோடு வாழைப்பழத்தில் ட்ரிப்டோஃபன், வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் பி போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன.

வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள்

வாழைப்பழத்தில் இயற்கையாகவே இனிப்பு நிறைந்துள்ளதால், இந்த பழத்தை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாமா கூடாதா என்ற ஓர் கேள்வி மனதில் எழலாம். ஆனால் ஒரு மிதமான அளவிலான வாழைப்பழத்தில் வெறும் 89 கலோரிகளே உள்ளன. அதோடு, இதில் மாங்கனீசு, கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் பி6 மற்றும் நீர்ச்சத்தும் நிறைந்துள்ளது. ஆகவே இது உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது.

ஏன் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது?

வாழைப்பழங்களில் பொட்டாசியம், நார்ச்சத்து, மக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்திருந்தாலும், இது வெறும் வயிற்றில் சாப்பிட சிறந்தது அல்ல என பல்வேறு ஆதாரங்கள் கூறுகின்றன. அதற்கான சில காரணங்கள் பின்வருமாறு:

* வாழைப்பழத்தில் அதிகளவிலான இயற்கை சர்க்கரை உள்ளதால், இது உடனடி ஆற்றலை அளித்தாலும், சில மணிநேரங்களுக்குப் பிறகு சோர்வடையச் செய்துவிடும்.

* வாழைப்பழம் தற்காலிகமாகவே ஒருவரது வயிற்றை நிரப்பும். அதன்பின், தூக்க உணர்வு மற்றும் மிகுதியான களைப்பை உணரை வைக்கும்.

* வாழைப்பழங்கள் இயற்கையாகவே அமிலத்தன்மைக் கொண்டவை. எனவே இந்த பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது, குடல் பிரச்சனைகளை உண்டாக்கக்கூடும்.

ஆயுர்வேதம் கூறுவது என்ன?

ஆயுர்வேதத்தின் படி, ஒருவர் எப்போதும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடக்கூடாது. வாழைப்பழத்தை மட்டுன்றி, வேறு எந்த பழங்களையுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. தற்போது கடைகளில் விற்கப்படும் பழங்கள் இயற்கையாக பழுக்க வைக்கப்படுவதில்லை. அனைத்துமே செயற்கை முறையில் தான் வளர்க்கப்படுகின்றன. எனவே இந்த வகையான பழங்களை காலையில் சாப்பிடுவது சரியானது அல்ல. இந்த பழங்களில் உள்ள கெமிக்கல்கள் நாம் நினைப்பதை விட தீங்கு உண்டாக்கக்கூடியவை. வேண்டுமானால், பழங்களை தனியாக சாப்பிடுவதற்கு பதிலாக, அவற்றை மற்ற உணவுகளுடன் சேர்த்து உட்கொண்டால், அதன் தாக்கத்தைக் குறைக்கலாம்.

சாப்பிடலாமா? கூடாதா?

காலையில் வாழைப்பழத்தை சாப்பிடலாம். ஆனால் அதை மற்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவதன் மூலம், அதன் தாக்கத்தைக் குறைக்கலாம். எனவே உங்கள் காலை உணவில் வாழைப்பழத்தை சேர்த்துக் கொள்ள நினைத்தால், அதுவும் எடை இழப்பு முயற்சியில் நீங்கள் இறங்கியிருந்தால், காலை உணவின் போது வாழைப்பழத்தை பிற பழங்கள் அல்லது ஓட்மீல் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடுங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button