முகப் பராமரிப்பு

முகத்தில் உள்ள அழுக்குகளை போக்கும் சமையலறைப் பொருட்கள்

தக்காளியில் ப்ளீச்சிங் தன்மை உள்ளது. எனவே தக்காளியின் சாற்றினை முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வார இறுதியில் மட்டுமின்றி, தினமும் செய்து வந்தால், முகத்தில் சேரும் அழுக்குகளை உடனே நீக்கலாம்.

தயிரை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், 2 வாரத்தில் உங்கள் முகத்தில் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும்.

தக்காளியைப் போன்றே எலுமிச்சையிலும் ப்ளீச்சிங் தன்மை உள்ளது. அந்த எலுமிச்சையின் சாற்றினை படுக்கச் செல்லும் முன், நீருடன் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், சருமத்தின் நிறம் கூடும்.
8abe9220 b5cf 4801 a8f4 27d4a52a398c S secvpf
உருளைக்கிழங்கை அரைத்து அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வாரம் ஒருமுறை செய்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.

பப்பாளியை அரைத்து முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், இறந்த செல்கள், அழுக்குகள் போன்றவை நீங்கி, முகம் பளிச்சென்று இருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button