28.2 C
Chennai
Tuesday, Dec 3, 2024
1 grilledchicken 1625114630
ஆரோக்கிய உணவு

க்ரில் சிக்கன் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா?

இறைச்சியில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது நாம் அனைவரும் அறிந்த உண்மை. இந்நிலையில், இறைச்சியை தீயில் எரித்து (கிரில்) செய்தால் புற்றுநோய் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதாவது, மிக அதிக வெப்பநிலையில் இறைச்சியை வறுக்கும்போது, ​​ஹெட்டோரோசைக்ளிக் அமின்கள் (HCAs) போன்ற புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்கள் உருவாகின்றன என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

அதிக வெப்பநிலையில் இறைச்சியை சமைப்பதால் இந்த இரசாயனங்கள் இறைச்சியின் மேற்பரப்பில் படிந்து புற்றுநோயை உண்டாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே இறைச்சியை வறுக்கும் போது இந்த குறிப்புகளை பின்பற்றினால், புற்றுநோயை தடுக்கலாம்.

1. இறைச்சியை சிறிய துண்டுகளாக வெட்டி சமைத்தல்
இறைச்சியை சுட்டு சமைப்பதற்கு முன்பாக, அதை மிகவும் சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் சிறிய துண்டுகள் வேகமாக வெந்துவிடும். அதனால் உயா்ந்த வெப்ப நிலையில் அவற்றை சுட்டு சமைக்கும் போது அவை நீண்ட நேரம் நெருப்பில் இருக்க வேண்டிய அவசியம் இருக்காது. அதன் மூலம் புற்றுநோய்க்கான வேதிப் பொருள்கள் இறைச்சியில் படியாது.

2. சவ்வு இல்லாத இறைச்சியைத் தோ்ந்து எடுத்தல்

சவ்வு இல்லாத கோழி இறைச்சி, கடல் உணவுகள் மற்றும் தோல் இல்லாத, கொழுப்பு குறைந்த வான்கோழி இறைச்சி இவற்றைத் தோ்ந்தெடுத்து அவற்றைக் குறைந்த வெப்ப நிலையில் சுட்டு சமைப்பது நல்லது என்று நிபுணா்கள் தொிவிக்கின்றனா். அவை தீங்கு இழைக்கக்கூடிய ஹைட்ரோகாா்பன்களைத் தரும் நெருப்பு மற்றும் புகையை குறைக்கின்றன.

3. இறைச்சியை அடிக்கடி திருப்பிப் போடுதல்

நாம் இறைச்சியை கம்பியில் மாட்டி, அதை நீண்ட நேரம் அப்படியே நெருப்பு தணலில் விட்டுவிட்டால், நாமாகவே புற்றுநோயை விலைக்கு வாங்குகிறோம் என்று பொருள். மாறாக கம்பியில் இருக்கும் இறைச்சியை அடிக்கடி திருப்பிப் போட வேண்டும். அப்போதுதான் இறைச்சியின் எல்லா பக்கமும் சாி சமமாக வேகும் மற்றும் இறைச்சியின் ஒரு பக்கம் மட்டும் அதிகமான புகையை அல்லது நெருப்பை உறிஞ்சாமல் இருக்கும்.

4. இறைச்சியை மசாலாக்களில் ஊற வைத்தல்

இறைச்சியை கம்பியில் மாட்டி சுட்டு சமைப்பதற்கு முன்பாக அதை வினிகா் அல்லது எண்ணெய் அல்லது ஒயின் அல்லது மசாலாக்களில் ஊற வைக்க வேண்டும். அதாவது அதை சுடுவதற்கு முன் குறைந்தது 30 நிமிடங்களாவது மேற்சொன்ன மசாலாக்களில் ஊற வைக்க வேண்டும். அப்படி செய்தால் அது எச்சிஎ (HCA) துகள் உருவாவதைத் தடுக்கும். மேலும் இவ்வாறு ஊற வைத்தால், அது இறைச்சிக்கும், வெப்பத்திற்கு இடையே தடையாக இருந்து அதிகமான வெப்பம் இறைச்சியைத் தாக்காமல் காக்கும். இறைச்சியை ஊற வைப்பதற்கு வினிகா் அல்லது எலுமிச்சை சாறு போன்றவற்றைப் பயன்படுத்தலாம் என்று நிபுணா்கள் தொிவிக்கின்றனா்.

5. இறைச்சியைச் சுடுவதற்கு முன்பாக சமைத்தல்

இறைச்சியை சுடுவதற்கு முன்பாக அதை அடுப்பு அல்லது ஸ்டவ் அல்லது மைக்ரோ அடுப்பில் வைத்து சிறிதளவு சமைப்பது நல்லது. அதனால் இறைச்சியை நீண்ட நேரம் நெருப்பில் சுடவேண்டி அவசியம் இருக்காது. அதனால் புற்றுநோய்க்குாிய வேதிப் பொருள்களும் இறைச்சியை நெருங்காது. அடுப்பில் ஓரளவு இறைச்சி வெந்தவுடன் அதை உடனே கம்பியில் மாட்டி நெருப்பில் சுட வேண்டும். அப்போதுதான் இறைச்சியை பாக்டீாியாக்கள் தாக்காது இருக்கும்.

6. வெப்பத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்தல்

மரக்காியில் நெருப்பு மூட்டி அதில் இறைச்சியைச் சுடுவதைவிட எாிவாயு மூலம் நெருப்பை மூட்டி அதில் இறைச்சியைச் சுடுவது நல்லது. ஏனெனில் எாிவாயு மூலம் கிடைக்கும் நெருப்பை நமது கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடியும். மேலும் எாிவாயு அடுப்பின் நடுப்பகுதியில் இறைச்சியை வைத்து சமைக்க முடியும்.

7. இறைச்சியோடு பழங்கள் மற்றும் காய்கறிகளை சோ்த்துக் கொள்ளுதல்

பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சுட்டால் அவற்றிலிருந்து எச்சிஎ (HCA) துகள்கள் உருவாவதில்லை என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன. மேலும் தாவர உணவுகள் புற்றநோய் ஏற்படுவதையும் தடுக்கின்றன என்று தொிவிக்கின்றன. ஆகவே கேரட், அஸ்பாரகஸ், மக்காச்சோளம், காளான், ஸ்குவாஷ், மிளகு, போிக்காய், பீச் பழம், அன்னாசிப்பழம் போன்றவற்றை இறைச்சியுடன் சோ்த்து சுடுவது நல்லது. அதற்கு முன்பாக அவற்றை ஏதாவது ஒரு உறையில் சுற்றி, இறைச்சியோடு சோ்த்து சுட வேண்டும். ஏனெனில் இறைச்சியோடு காய்கறிகள் மற்றும் பழங்களைச் சுடும் போது, அவற்றில் புற்றுநோய் துகள்கள் படிய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் உறையில் சுற்றி சுட வைத்தால் அந்த துகள்களைத் தடுக்கலாம்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…பாகற்காயை உணவில் அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா சைவம் என நினைத்து தினமும் சாப்பிடும் 5 அசைவ உணவுகள் !! அப்ப உடனே இத படிங்க…

nathan

இளமையை நீண்ட நாட்கள் தக்க வைக்க அடிக்கடி இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க..சூப்பர் டிப்ஸ்…

nathan

தெரிஞ்சிக்கங்க…சூடா வெந்தய டீ குடிச்சா என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

nathan

உயிரை பறிக்கும் விஷமாக மாறும் பழங்கள்… தெரிந்துகொள்வோமா?

nathan

நைட் தூங்கும் முன் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

சூப்பர் டிப்ஸ் கெட்ட கொழுப்பை கரைக்க சோயா பீன்ஸ் சுண்டல்..!

nathan

50 கலோரிகள் கீழ் உள்ள உணவுகள்

nathan

மணத்தக்காளி கீரையின் அற்புத மருத்துவ பயன்கள் !!

nathan