ஆரோக்கிய உணவு

சால்மன் மீன் சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் பாருங்கள்!

மட்டன், சிக்கன் உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு கடல்வகை உணவுளை சாப்பிடுவதில் கவனம் கொள்ளுங்கள்.

ஏனெனில் ஆடு, மாடு கோழிகளை வளர்க்கும்போது, அதற்கு தீவனம் என்ற பெயரில் இயற்கை உணவுகளை கொடுத்தாலும், சில இராசயனங்கள் கலந்த உணவு வகைகள் கொடுக்கப்படுகின்றன.

ஆனால், மீன்வகை உணவுகளில் பெரும்பாலும் இராசயனங்கள் கலந்திருக்க வாய்ப்பில்லை.

தற்போது மீன் வகைகளில் ஒன்றான சால்மன் மீன் பற்றி பார்ப்போம்.

சால்மன் மீன் இதய ஆரோக்கியம், தசை மற்றும் திசுக்களின் வளர்ச்சி, கண்கள் மற்றும் உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது.

அடங்கியுள்ள சத்துக்கள்

பேட்டி ஆசிட்டான ஒமோ 3, விட்டமின் டி, ஏ மற்றும் விட்டமின் பி உள்ளது, மேலும் சிலினியம், ஜிங்க், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து போன்ற மினரல் சத்துக்கள் உள்ளன.

100 கிராம் சால்மன் மீனில், 231 கலோரி, 25 கிராம் புரோட்டின், 85 மிகி கொலஸ்ட்ரால் மற்றும் 3.2 கிராம் saturated fat உள்ளது.

மருத்துவ பயன்கள்

1. விட்டமின் டி மற்றும் செலினியம் சத்துக்கள், உடல் முழுவதும் இன்சுலின் அளவை நிர்வகிக்கவும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கவும் உதவுகிறது.

2. ஒமோ 3 பேட்டி ஆசிட் உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்து, திசுக்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பினை குணப்படுத்த உதவுகிறது. மேலும், கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுவதால், மாரடைப்பில் இருந்து பாதுகாக்கிறது.

3. மூளை செயல்பாடுகள் மற்றும் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகிறது, சால்மன் மீன் சாப்பிட்டால் பலமணி நேரங்கள் உங்களால் எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்ய முடியும்.

4. நரம்பு மண்டலத்தை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், அல்சைமர் மற்றும் Parkinsons நோயிலிருந்து பாதுகாக்கிறது.

5. கர்ப்பப்பபை புற்றுநோய் மற்றும் சிறுநீரக புற்நோயை குறைக்கிறது.

6. தோல் பளபளப்பு, முடி வளர்ச்சி போன்றவற்றிற்கு இதில் உள்ள ஒமேகா 3 பேட்சி ஆசிட் உதவுகிறது.

7. புரோட்டின் சத்து நிறைந்துள்ளதால், உடல்நிலை சரியில்லாதவர்கள் சாப்பிட்டால், நோயெதிர்ப்பு சத்தி குறையும்.

8. இது எளிதில் செரிமானம் அடையக்கூடிய உணவாகும்.
salmon fish

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button