செட்டிநாட்டுச் சமையல்

சிக்கன் செட்டிநாடு மசாலா செய்வது எப்படி

எளிமையான முறையில் சிக்கன் செட்டிநாடு மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சிக்கன் செட்டிநாடு மசாலா செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

சிக்கன் – 1/2 கிலோ
வெங்காயம் – 1
தக்காளி – 1
இஞ்சி – 2 இன்ச்
பூண்டு – 10 பல்
தேங்காய் – 5 கீற்று
சோம்பு – 1 டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
மிளகாய் பொடி – 2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
பட்டை – 1 சிறு துண்டு
கொத்தமல்லி தழை – சிறிதளவு

செய்முறை :

* சிக்கனை கழுவி சுத்தம் செய்து தேவையான அளவு நறுக்கிக் கொள்ளவும்.

* வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, தேங்காயம், சோம்பு, மிளகு, சிறிது வெங்காயம், மிளகாய் பொடி, மசாலா மிளகாய் பொடி, மஞ்சள் பொடி எல்லாவற்றையும் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.

* குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு நன்கு குழைய வேகவைக்கவும்.

* அடுத்து அதில் கழுவி வைத்துள்ள சிக்கனையும் போட்டு நன்கு வதக்கவும்.

* பின் அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டு வதக்கி தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.

* வெந்தவுடன் குக்கரைத் திறந்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.201607251404508901 how to make Chicken Chettinad masala SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button