ஆரோக்கிய உணவு

முடி உதிர்வை தடுக்கும் முடக்கத்தான் கீரை!!

தலைமுடி உதிர்வை தடுக்க எவ்வளவோ முயற்சித்திருப்பீர்கள். அவரவர் கூந்தலின் வகைக்கேற்ப வழிகளை கையாள வேண்டும். இங்கே குறிப்பிட்டவை நமது பழைய காலத்தில் நம் பாட்டிகள் உபயோகித்தது. நீங்களும் முயற்சித்து பாருங்கள். முடி ஆரோக்கியமாக வளரும்.

முடி உதிர்வதை தடுக்க சில எளிய முறைகள்: வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாதகாலம் செய்து வந்தால், எந்த காரணத்தால் முடி கொட்டினாலும் நின்றுவிடும். அதோடு, நரை விழுவதையும் தடுக்கும். முடியும் கருகருவென வளரும்.

இரவில் நெல்லிக்காய்களை தண்ணீரில் ஊறப் போட்டு, காலையில் அந்நீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். செம்பட்டை முடியும் நிறம் மாறும்.

தலைமுடி நன்றாக வளர கற்றாழைச் சாறில் எண்ணெய் கலந்து தலையில் தேய்க்கலாம். இப்படி செய்து வந்தால் முடி உதிராது, அடர்த்தியாகவும் வளரும். தலையும் குளிர்ச்சியாக இருக்கும்.

புளித்த தயிர் + மருதாணி:

புளித்த தயிரில் மருதாணி இலை, செம்பருத்திப்பூ மூன்றையுமே அரைத்து கலக்கி தலையில் பூசி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு சீகைக்காய் தூள் போட்டு குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் முடி கொட்டாது. பொடுகும் வராது. கூந்தல் பட்டுப்போல் காட்சியளிக்க நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகியவற்றை அரைத்து தேங்காய்ப் பாலுடன் கலந்து தலையில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முடி நன்கு வளர்வதோடு, மயிர்க்கால்களும் நன்கு வலுப்பெறும்.

சோற்று கற்றாழை + வெந்தயம்:

சோற்றுக் கற்றாழையை கீறி அதன் நடுவில் வெந்தயம் வைத்து இரண்டு பக்கமும் கயிறால் மூடி கட்டி விட வேண்டும். கறுப்பு உளுந்தை இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஊற வைத்த கறுப்பு உளுந்து, முளை கட்டிய வெந்தயம், சோற்றுக் கற்றாழை கூழ் இவை மூன்றையும் அரைத்து அதனுடன் செம்பருத்தி இலையையும் சேர்த்து பேக் போல தலையில் போட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்த பின்னர் குளித்தால் நுனி முடியின் வெடிப்பை மறைந்து போய், அடர்த்தியான முடி வளரும்.

வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து ஃபிட்ஜில் வைத்து கொள்ளுங்கள் தினமும் குளிப்பதற்கு முன்பாக தலையில் நன்கு தேய்த்து அரைமணி நேரம் நன்கு ஊறவிட்டு நன்கு அலசிவிடுங்கள். ஷாம்பு போட வேண்டிய அவசியமில்லை இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் செய்து வரவும். நிச்சயமாக முடி கொட்டுவது நின்றுவிடும்

hairfall 26 1469505553

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button