உடல் பயிற்சி

ஞாபக சக்தியை அதிகரிக்கும் வாக்கிங்

தினமும், "வாக்கிங்’ செல்வதால், உடல் தசைகள் சுறுசுறுப்பு அடைகின்றன. தசைகளின் இயக்கத்திற்கு தேவைப்படும் குளுக்கோஸ், ரத்தத்தில் இருந்து, அவற்றுக்கு தொடர்ந்து கிடைப்பதன் மூலம், "இன்சுலின்’ சுரப்பது சீராக்கப்பட்டு, நீரிழிவு நோய் வராமல் தடுக்கப்படுகிறது. உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறையால், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற, தொற்று அல்லாத, நீண்டகால நோய்களும் அதிகரித்து வருகின்றன.
நடுத்தர வயதினரை மட்டுமின்றி, இளம் தலைமுறையையும் ஆட்டிப் படைக்கும் இந்நோய்கள் வராமல் தடுக்க, சிறந்த, எளிய வழி, "வாக்கிங்’ எனப்படும் நடைப்பயிற்சி. தினமும், குறைந்தபட்சம் ஒரு மைல் தூரம் நடக்கும்போது, உடல் ஆற்றலில், 200 கலோரிகள் செலவிடப்படுகின்றன. இதனால், உடல் உயரம் மற்றும் வயதிற்கேற்ப, உடல் எடை பராமரிக்கப்பட்டு, உடல் பருமன் பிரச்னை, உயர் ரத்த அழுத்த நோய் ஆகியவை தவிர்க்கப்படுகிறது. உடலில், கொழுப்பு குறைவதால், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பும் குறைகிறது.
நடைப் பயிற்சியில், மனம் ஒருமுகப்படுவதால், மன அழுத்தம், மன இறுக்கம் ஆகியவை குறைந்து, மன நோய்கள் வருவதற்கான வாய்ப்பும் வெகுவாக குறைகிறது. "வாக்கிங்’ செல்வதால், மூளைக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைத்து, ஞாபக சக்தி கூடுகிறது. இதனால், வயோதிகத்தில், "அல்சீமர், "டிமென்ஷியா’ போன்ற ஞாபக மறதி தொடர்பான நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது.
நடைப்பயிற்சியால், இரவில் நல்ல தூக்கம் வருவதுடன், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. உடல் எலும்புகள் வலுவடைவதால், மூட்டு தேய்மானம், எலும்பு மெலிதல் போன்ற நோய்கள் வருவதில்லை.31 1441010052 walking34 600

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button