முகப் பராமரிப்பு

முகச் சுருக்கத்தை போக்கி, என்றும் இளமையாக இருக்க வேண்டும் என ஆசையா?

இந்த அல்டிமேட் காலத்தில் எதுவும் சாத்தியமாகிற சூழ் நிலையைத்தான் நாம் உருவாக்கியிருக்கிறோம். நமது வாழ்க்கை முறையையும், பொருளாதார நிலையையும் இன்னும் சிறந்த வழியில் எடுத்துக் கொண்டு செல்ல முயற்சிக்கிறோம். ஆனால் நம் உடலில் சில சின்ன சின்ன விஷயங்களை கவனிக்கத் தவற விடுகிறோம்.

உதாரணம் உடலுக்கு தேவையான நீர் குடிக்கிறோமா என ஒருநாளும் நாம் நினைப்பதில்லை. போதிய நீர் குடிக்காமல் இருந்து உடலில் பிரச்சனைகளை கொண்டு வருகிறோம். அதே வேளையில் நம் சருமமும் ஈரப்பதத்தை இழந்து பொலிவில்லாமல் காணப்படும்.

தண்ணீர் குடிக்காதது மட்டும் காரணம் இல்லை. மாசுபட்ட சுற்றுப்புற சூழல், போதிய ஊட்டச்சத்து இல்லாமல் இருப்பது, டென்ஷன், கெமிக்கல் கலந்த அழகு சாதனங்கள் என எல்லாமே சேர்ந்து முகத்தில் சுருக்கங்கள் கருவளையம் என எல்லா பிரச்சனைகளையும் கொண்டு வருகிறது.

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல சருமம் பாதித்த பிறகுதான் நமக்கு தெரிகிறது.அதற்காக மேலும் விளம்பரங்களைப் பார்த்து, கண்ட கண்ட அழகு சாதனங்களை போடாமல், இயற்கை வழியிலேயே நம் சருமத்தை ரிப்பேர் செய்யலாம் வாருங்கள்.

வீட்டில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு ஐந்தே நிமிடங்களில் தயார் செய்யலாம். இது பக்க விளைவினைத் தராது. சமையலறையில் இருக்கும் இந்த பொருட்கள் சருமத்தின் சுருக்கத்தைப் போக்கி, போஷாக்கு அளித்து முகத்தை ஜொலிக்கச் செய்யும்.

தேவையானவை :

பால் பவுடர் 1 டீஸ்பூன் தேன் -1 டீஸ்பூன்

பால் பவுடல் லேக்டிக் அமிலத்தை கொண்டுள்ளது. அது சரும துவாரத்தில் அடைத்திருக்கும் இறந்த செல்களை அகற்றி துவராங்களை திறக்கச் செய்கிறது. இதனால் சருமம் நன்றாக சுவாசிக்க உதவுகிறது.ரத்த ஓட்டம் அதிகரிக்கும். சுருக்கங்கள் விலகும். முகத்தசைகள் இறுக்கமாகும்.

தேன் சிறந்த ஆன்டிஆக்ஸிடென்ட்.முகத்தில் ஏற்படும் தொற்றுக்களையும் அழுக்குகளையும் அகற்றும் . முகத்தை தொய்வடையாமல் இறுகச் செய்யும்.முகத்திற்கு பளபளப்பைத் தரும்.

இந்த இரு பொருட்களையும் சம அளவு எடுத்து, நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அதனை முகத்தில் போட்டு மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும்.

பாலாடை :

வறண்ட சருமம் உள்ளவர்கள் பாலாடையுடன் தேன் தேர்த்து முகத்தில் போட்டு காய வைக்கலாம். பின் கழுவிவிட வேண்டும்.இவ்வாறு செய்தால் சருமத்தில் உள்ள வறட்சி நீங்கி, சருமம் மிக அழகாய் மாறிவிடும்.

எண்ணெய் சருமமா?

எண்ணெய் சருமத்திற்கு வெள்ளரிக்காய் சிறந்த பலனகளைத் தருமம். சருமத்திற்கு தேவையான எண்ணெயை தக்க வைத்து அதிகப்படியான எண்ணெயை அகற்றிவிடும். அதேபோல் எலுமிச்சை சாறு இறந்த செல்களை அகற்றி முகப்பருக்களை மறையச் செய்யும்.

தேவையானவை :

வெள்ளரிக்காய் -2 துண்டுகள் பால் – 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு – சில சொட்டுக்கள்.

வெள்ளரிக்காயை அரைத்து அதனுடன் பால் மற்றும் எலுமிச்சை சாற்றினை கலந்து முகத்தில் தடவுங்கள் . காய்ந்ததும் கழுவி விடலாம். பிறகு வித்யாசத்தை நீங்கள் காண்பீர்கள்.

மேற்கூறிய இரு பேக்குகளும் பாலினால் செய்யக்கூடியவை. வாரம் இரு முறை செய்யலாம். பின் உங்கள் முகம் பொலிவு பெறுவதை உங்கள் தோழிகளே சொல்வார்கள்
4 12 1463046309

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button