சைவம்

சுவையான கோவைக்காய் ரைஸ் செய்வது எப்படி

சுவையான கோவைக்காய் ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சுவையான கோவைக்காய் ரைஸ் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

கோவைக்காய் – 100 கிராம்,
வடித்த சாதம் – ஒரு கப்,
வெங்காயம் – ஒன்று,
தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு,
உப்பு, மிளகாய்த்தூள் – தேவையான அளவு.

செய்முறை :

* வெங்காயம், கோவைக்காயை பொடியாக நறுக்கிவைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் சற்று வதங்கியதும் கோவைக்காயை போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் மூடி வைத்து வேக விடவும்.

* கோவைக்காய் நன்றாக வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் எலுமிச்சை சாறு விட்டு கலக்கி இறக்கவும்.

* இதனுடன் வடித்த சாதம் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

* சுவையான கோவைக்காய் சாதம் ரெடி.
201605180810249535 How to make delicious kovakkai Rice SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button