கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

Beauty tips.. கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் மருத்துவக் குணங்கள் நிறைந்த செம்பருத்திப்பூ…!!

பூவை நீரிட்டுக்காச்சி வடிகட்டிப்பாலும் சர்கரையும் சேர்த்து காலை மாலை பருக மார்புவலி, இதய பலவீனம் தீரும். காப்பி, டீ புகையிலை நீக்கவேண்டும்.

பூவை உலர்த்திப் பொடித்துச் சம எடை மருதம் பட்டைத்தூள் கலந்து பாலில் காலை மாலை பருக இதயபலவீனம் தீரும். பூவை நல்லெண்ணையில் காச்சி தடவ முடி வளரும்.

செம்பரத்தை வேர்ப்பட்டை, இலைந்தை மரப்பட்டை மாதுளம் பட்டை சம அளவு சூரணம் செய்து 4 சிட்டிகை காலை மாலை சாப்பிட பெரும் பாடு தீரும்.

9616157760e5a6ae031bb92113966a709de9f66f239319130051952380

செம்பரத்தம் பூ 500 கிராம் அம்மியில் நெகிழ அரைத்து அதில் ஒரு கிலோ சர்க்கரையைப் போதிய நீர்விட்டுக் கரைத்து வடிகட்டிக் கலந்து சிறுதீயில் எரித்துக்குழம்புப் பதமாக்கி வைத்துக்கொண்டு 15 மி.லி.யாகக் காலை மாலை சாப்பிட்டு வர உட் சூடு, நீரெருச்சல், உள்ளுறுப்புகளில் உள்ள புண், ஈரல் வீக்கம், நீர்கட்டு ஆகியவை தீரும்.

செம்பருத்திப்பூவின் மகரந்தக் காம்பு உலர்திய தூள் 5 கிராம் பாலில் சாப்பிட மலடு நீங்கும். தஙகச்சத்து இப்பூவில் இருப்பதால் தாதுவிருத்திக்கு மிகவும் சிறந்ததாகும். தினமும் 10 பூவினை மென்று தின்று பால் அருந்தினால் நாற்பது நாளில் தாதுவிருத்தி ஏற்படும். நீர்த்துப்போன விந்து கெட்டிபடும், ஆண்மை எழுச்சி பெறும்.

உலர்த்திய பூ சூரணத்துடன் முருங்கைப்பூ அல்லது விதை உலர்த்திய தூளும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடு நீங்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button