ஆரோக்கிய உணவு

கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் தனியா பொடி

தனியா(மல்லி(தனியா)) பொடியை உட்கொண்டால் அது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் என்று பல ஆராய்சிகள் கூறுகிறது.

கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் தனியா பொடி
இன்றைய கால சூழலில் சர்க்கரை நோய் அதிகமாக காணப்படுகிறது. தனியா(மல்லி(தனியா)) பொடியை உட்கொண்டால் அது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் என்று பல ஆராய்சிகள் கூறுகிறது. மல்லி(தனியா)ப்பொடியில் 8% நார்ச்சத்து மற்றும் 2.9% கால்ஷியம் அதில் அடங்கியுள்ளது.

மிகவும் ஆபத்தான சால்மோனெல்லா என்ற பாக்டீரியாவை அழிக்க மல்லி(தனியா) பயன்படுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. சால்மோனெல்லா பாக்டீரியா உணவு சம்பந்தமான நோய்களை உண்டாக்கும். உங்கள் உணவுகளில் மல்லி(தனியா) போன்ற ஆரோக்கியமான மசாலாக்களை சேர்த்தால் இவ்வகை நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கலாம்.

மல்லி(தனியா)யில் பைடோந்யூட்ரியெண்ட் குணங்கள் உள்ளதால் தான் நமக்கு பல மருத்துவ பயன்களை அளிக்கிறது. உடல்நல பலன்களை தவிர மல்லி(தனியா) பொடி பருக்களை நீக்கவும் பெரிதும் உதவுகிறது. மல்லி(தனியா) பொடியையும் மஞ்சளையும் அல்லது மல்லி(தனியா) சாற்றை பயன்படுத்தி பருக்களை பெரிதளவில் குறைக்கலாம்.

மல்லி(தனியா) பொடி கொலஸ்ட்ராலை வெகுவாக குறைக்கும். மல்லி(தனியா)யை பொடி அல்லது கொட்டை வடிவாக உட்கொண்டால் அது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெகுவாக குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. மாதவிடாயின் போது இரத்த கசிவு அதிகமாக இருந்தால் மல்லி(தனியா) பொடியை அல்லது மல்லி(தனியா) விதையை வெந்நீரில் போட்டு உட்கொள்ளுங்கள்.

மேலும் மாதவிடாய் காலங்களில் வரும் வயிற்று வலியை போக்கும் சக்தி கொண்டது மல்லி(தனியா) பொடி. மல்லி(தனியா) எந்த வடிவத்தில் (இலை, விதை, பொடி) இருந்தாலும் சரி, அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட் குணங்கள் உடலில் உள்ள இயக்க உறுப்புகளுக்கு எதிராக போராடும்.201606041255249960 coriander seeds and power to reduce bad cholesterol SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button