ஆரோக்கிய உணவு

முட்டை கெட்டுவிட்டதா? இல்லையா? என கண்டுபிடிக்கும் வழிமுறைகள் !!!

காய்கறி, இறைச்சி போன்றவற்றை அதன் வெளித் தோற்றம் மற்றும் வாசனையை வைத்தே அது கெட்டுவிட்டதா, இல்லையா என அறிந்துக் கொள்ளலாம். ஆனால், முட்டையை அவ்வாறுக் கண்டறிவது மிகவும் கடினம்.

முட்டை கெட்டப் போனாலும், நன்றாக இருந்தாலும் வெளிப்புற வெள்ளை ஓட்டில் எந்த விதமான மாறுபாடும் தெரியாது. வாசனையும் பெரிதாக வராது. ஆனால், சில வழிமுறைகளை வைத்து நீங்கள் வாங்கின முட்டை கெட்டுவிட்டதா? இல்லையா என கண்டரிந்துக் கொள்ளலாம்…

மிதக்கும்

ஒரு முட்டையை அதை விட இரண்டு மடங்கு அதிகமான தண்ணீர் நிறைத்த பாத்திரத்தில் போடவும். முட்டை பாத்திரத்தின் அடி பாகத்திற்கு சென்றாலோ அல்லது பாத்திரத்தின் பக்கவாட்டு பகுதியை ஒட்டி இருந்தாலோ அந்த முட்டை நன்றாக தான் இருக்கிறது என்று அர்த்தம். ஒருவேளை, அந்த முட்டை தண்ணீரில் மிதந்தவாறு இருந்தால் அந்த முட்டை கெட்டுவிட்டது என்று அர்த்தம்.

வெள்ளை நிறம்

முட்டை நன்றாக தான் இருக்கிறதா என அறிவதற்கான மற்றொரு முறை, ஒருவேளை நீங்கள் முட்டையை உடைத்து பயன்படுத்துவதாக இருந்தால். வெள்ளை கருவின் நிறத்தை வைத்துத் அது நன்றாக இருக்கிறதா என தெரிந்துக் கொள்ளலாம். தெளிவான வெள்ளை நிறமாக இருந்தால் முட்டை நன்றாக இருக்கிறது என்று அர்த்தம். அதன் நிறத்தில் ஏதேனும் வேறுபாடு தெரிந்தாலோ அல்லது நிறம் மங்கி இருந்தாலோ முட்டை கெட்டுவிட்டது என்று அர்த்தம்.

சலசலவென்ற சத்தம் – ச்லோஷிங்

முட்டையை உங்களது காதருகே வைத்து ஆட்டிப்பார்த்தல், ஒரு விதமான சலசலவென்ற சத்தம் வரும் (பாட்டிலில் பாதி தண்ணீர் நிறைத்து மேலும், கீழும் ஆட்டினால் வரும் சத்தம் போல) இவ்வாறு சத்தம் வந்தால், அந்த முட்டை முற்றிலுமாக கெட்டுவிட்டது என்று அர்த்தம்.

கலங்கிய நிலையில் மஞ்சள் கரு

முட்டையை உடைத்துப் பார்க்கும் போது, மஞ்சள் கரு வட்டமாக இல்லாமல் சிதறியோ அல்லது கலங்கிய நிலையில் இருந்தால் முட்டை கெட்டுவிட்டது என்று அர்த்தம்.

கருத்து

எனவே, மேற்கூறிய முறைகளை வைத்து, நீங்கள் பயன்படுத்தும் முட்டை நல்ல நிலையில் உள்ளதா அல்ல கெட்டுப் போய்விட்டதா என எளிதாக கண்டறிந்து பயன்படுத்தலாம். இது, உங்கள் உடல் நலத்திற்கும் நல்லது.
13 1434190944 5waystoknowiftheeggisfresh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button