சிற்றுண்டி வகைகள்

மாலை நேர ஸ்நாக்ஸ் மினி போண்டா

மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு கொடுக்க மிகவும் உகந்தது இந்த ஸ்நாக்ஸ். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

மாலை நேர ஸ்நாக்ஸ் மினி போண்டா
தேவையான பொருட்கள் :

மைதா – 1 கப்
அரிசிமாவு – 3 மேசைக்கரண்டி
தயிர் – கால் கப்
மிளகு – 2 மேசைக்கரண்டி
இஞ்சி – 1 துண்டு
தேங்காய் சிறிய துண்டுகளாக நறுக்கியது – 10
பெருங்காயத் தூள் – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவையானது

செய்முறை :

* கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மிளகை கொரகொப்பாக பொடித்து கொள்ளவும்.

* ஒரு அகண்ட பாத்திரத்தில் மைதா மாவு, அரிசிமாவு, தயிர், மிளகு, இஞ்சி, தேங்காய் துண்டுகள், பெருங்கயத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்து வடை மாவு பதத்தில் நன்றாக கலந்து அரை மணிநேரம் ஊறவைக்கவும்.

* வாணலியில் தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக போட்டு சுட்டு எடுக்கவும்.

* இந்த போண்டாவை தக்காளி சட்னியுடன் சாப்பிட ருசியாக இருக்கும்.201607191420509898 Evening Snacks mini Bonda SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button