ஆரோக்கிய உணவு

சப்போட்டா பழத்தில் உள்ள சத்துகள்

வாயில் இட்டால் தித்திக்கும் சப்போட்டா பழத்தில் சத்துகளுக்குப் பஞ்சமே இல்லை. அதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.

சப்போட்டா பழத்தில் உள்ள சத்துகள்

சப்போட்டா பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…

100 கிராம் சப்போட்டா பழத்தில் 28 மில்லி கிராம் கால்சியமும், 27 மில்லிகிராம் பாஸ்பரசும் உள்ளது. எனவே தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் வளர்ச்சி அதிகரிக்கும், எலும்புகள் வலுவடையும், சருமம் பளபளப்பாகும்.

சப்போட்டா, ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, கொழுப்பை நீக்குகிறது. வாய்ப்புண், வயிற்றெரிச்சல், மூலநோய் மற்றும் மலச்சிக்கலுக்கும் தீர்வு தருகிறது, எலும்புகளை வலுவடையச் செய்கிறது.

இரவில் உறக்கம் வராமல் அவதிப்படும் நிலைக்கு நல்ல மருந்தாகும், சப்போட்டா. இதை ‘ஜூஸ்’ ஆக தயாரித்து அருந்தலாம்.

பழக்கூழ், ஜாம், மில்க் ஷேக் என்று சப்போட்டாவை விதவிதமாய் தயாரித்தும் சாப்பிடலாம்.

இதயம் சம்பந்தமான கோளாறுகளில் இருந்து காக்கும் தன்மையும் சப்போட்டா பழத்துக்கு உண்டு என ஓர் ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்றுநோய் ஏற்படாது. சருமத்தை மிருதுவாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்துக்கு உண்டு.

உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பைக் குறைத்துவிடும் அரிய தன்மையும் சப்போட்டாவுக்கு இருக்கிறது.

சப்போட்டா பழ ஜூசுடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் சளித்தொல்லை நீங்கும். இது பித்தத்தினால் ஏற்படும் வாந்தி மயக்கத்தை போக்குகிறது. சப்போட்டா பழத்துடன் உரு டீஸ்பூன் சீரகம் கலந்து சாப்பிட பித்தம் நீங்கும். 2 சப்போட்டா பழத்துடன், ஒன்றரை டீஸ்பூன் டீ தண்ணீரை கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கின் போது ரத்தம் கலந்து வெளியேறுவது குணமாகும்.

சப்போட்டா உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைக்கும். சப்போட்டா பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், இரண்டு பழத்துடன், ஒரு டம்ளர் பால் சேர்த்து, மிக்ஸியில் அடித்து மில்க் ஷேக் செய்து சாப்பிடலாம்.201611201445089420 Sapota fruit in nutrients SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button