சிற்றுண்டி வகைகள்

சுவையான சத்தான கேழ்வரகு வெங்காய தோசை

அதிக சத்துக்கள் நிறைந்த கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இப்போது கேழ்வரகு வெங்காய தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சுவையான சத்தான கேழ்வரகு வெங்காய தோசை
தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு – 1 கப்,
தோசை மாவு – 2 கரண்டி,
தண்ணீர், உப்பு – தேவையான அளவு,
சீரகம் – சிறிதளவு,
பச்சைமிளகாய் – 2
வெங்காயம் – 1

செய்முறை :

* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ராகி மாவில் தோசை மாவு, தேவையான அளவு உப்பு, தாளித்த சீரகம், நறுக்கிய பச்சை மிளகாயைச் சேர்த்து தோசை மாவுப் பதத்துக்குக் கலக்க வேண்டும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை 1 கரண்டி ஊற்றி மேலே நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை தூவி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

* சுவையான சத்தான கேழ்வரகு வெங்காய தோசை ரெடி.

பலன்கள்: கேழ்வரகில் புரதம் மற்றும் இரும்புச்சத்துக்கள் உள்ளன. கால்சியம் நிறைந்திருப்பதால், எலும்பு மற்றும் பல் உறுதியாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.201611301201292921 how to make ragi onion dosa SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button