ஆரோக்கிய உணவு

துரித உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் துரித உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம். இதனால் அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

துரித உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்
நாம் பயன்படுத்தி வந்த பாரம்பரிய உணவு முறைகளை மறந்து வருகிறோம். தற்போது மக்கள் துரித உணவுகளை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் அதன் மூலம் உடலில் பல்வேறு நோய்கள் வருகிறது. துரித உணவுகளை பெரியவர்கள் சாப்பிடுவது மட்டுமில்லாமல் குழந்தைகளுக்கும் கொடுக்கின்றனர். இதனால் குழந்தைகளையும் நோய்கள் தாக்குகிறது.

எனவே இனியாவது குழந்தைகளுக்கு துரித உணவுகள் கொடுப்பதை நிறுத்தி விட்டு நமது பாரம்பரிய உணவுகளான கேழ்வரகு, கம்பு, கூழ், தினை, வரகு, சாமை, குதிரைவாலி மற்றும் காய்கறிகள் போன்ற சத்தான உணவுகளை கொடுக்க வேண்டும். இந்த உணவுகள் சாப்பிடுவதால் உடலில் எந்தவித பாதிப்பும், நோய்களும் ஏற்படாது. பாரம்பரிய உணவுகளின் நன்மைகளை குழந்தைகளுக்கு தொடக்கத்திலேயே சொல்லி கொடுக்க வேண்டும். இது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

இதனால் எதிர்காலத்தில் அவர்கள் ஆரோக்கியத்துடன் வாழ வழிவகுக்கும்.

இதேபோல் மண்சட்டியின் பயன்பாடு, அதில் சமைத்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளையும் சொல்லி கொடுக்க வேண்டும். பாரம்பரிய உணவு முறைகளை நாம் எடுத்து கொள்வதால் உடல் ஆரோக்கியமாக நீண்ட காலம் உயிர் வாழலாம்.
201612020833128917 Fast foods do not give to children SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button