ஆரோக்கிய உணவு

எலும்புகளை பலமாக்கும் உணவுகள்

சில உணவு வகைகளைத் தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், எலும்பு சம்பந்தமான நோய்கள் வருவதை தவிர்க்கலாம். அவை என்னவென்று கீழே பார்க்கலாம்.

எலும்புகளை பலமாக்கும் உணவுகள்
உடல் எலும்புகள் பலமாக இருக்க வேண்டும் என்றால் சுண்ணாம்புச்சத்து தேவையான அளவு இருக்க வேண்டும். கூடவே, வைட்டமின் `டி’யும் தேவை.

இந்த சத்துகள் பால், தயிர், மீன், முட்டை, வெண்ணை ஆகியவற்றில் நிறைய காணப்படுகின்றன. இவற்றுடன் தினசரி, முளைவிட்ட கொண்டைக் கடலையும் சாப்பிட்டு வரவேண்டும். சூரியக் குளியலும் அவசியம். டாக்டர் யோசனைப்படி வைட்டமின் `டி’யை மாத்திரையாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

சுண்ணாம்புச் சத்து அதிகம் கிடைக்க வேண்டும் என்றால் முட்டைகோஸ், தவிடு நீக்காத கோதுமை மாவில் செய்யப்பட்ட சப்பாத்தி, தண்டுக்கீரை, கேரட், ஆரஞ்சுப் பழம், பாதாம் பருப்பு, வால்நட் பருப்பு ஆகியவற்றையும் தெடர்ந்து உணவில் சேர்த்து வரவும்.

இதயம் வேகமாக துடித்தல், தூக்கமின்மை, தசைவலி, எரிச்சல் போன்ற பாதிப்புகள் தெரிந்தால் அது சுண்ணாம்புச் சத்துக் குறைபாட்டின் அறிகுறியேதான்.

மேற்கூறிய உணவு வகைகளைத் தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், எலும்பு சம்பந்தமான நோய்கள் வருவதை தவிர்க்கலாம்.201612071321096476 Foods to stronger bones SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button