மருத்துவ குறிப்பு

வாய் துர்நாற்றம் – (Bad Breath or bad Smell in Mouth)

முக்கிய காரணங்கள் “வாய் துர்நாற்றம் வர பல் சொத்தையாக இருப்பது (Decayed teeth), அல்லது பற்களை சரியாக சுத்தம் செய்யாமல் இருப்பது.(Improper oral hygiene ) தொண்டையின் இரு பக்கமும் “டான்ஸில்” சுரப்பி உள்ளது. இந்த சுரப்பியில் நோய் தொற்று ஏற்பட்டால் வாயில் துர்நாற்றம் ஏற்படும்(I nfection in Tonsils – Tonsillitis ) .

வயிறு தொடர்பான பல பிரச்னைகளால் வாய் துர்நாற்றம் ஏற்படலாம். (மலச்சிக்கல்-Constipation,அஜீரண கோளாறுகள்- Digestive problems, அதிகப்படியான அமிலம் சுரத்தல்-Hyper Acidity, இரைப்பையில் உள்ள உணவு இரண்டரை முதல் நான்கு மணி நேரத்துக்குள் ஜீரணாகிவிட வேண்டும். இரைப்பையில் கட்டி, புண்-Ulcer என்று ஏதேனும் இருந்து, உணவு நெடு நேரம் தங்கியிருந்தால் வயிற்றிலிருந்து அந்த உணவால் வரக்கூடிய “புளித்த நாற்றம்- bad smell in mouth” வாயிலும் வரும்.

கேஸ்ட்ரோ ஈசோபேகல் ரிஃப்லெக்ஸ் டிசீஸ்,(Gastero Esophageal Reflux Disease) எனப்படும் பிரச்சினை. சிலருக்கு இரைப்பையில் இருந்து அமிலம் மேல் நோக்கி உணவுக் குழாய்க்கு வந்து போகும். இந்தப் பிரச்னை இருந்தாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும்.

தகுதிவாய்ந்த மருத்துவரை ஆலோசிப்பதன் மூலம் வாய்துற்நாற்றம் எதனால் ஏற்படுகிறது என்று கண்டறிந்து சிகிச்சை கொடுப்பதன் மூலம் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம் .
img1130228064 1 1

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button