ஆரோக்கிய உணவு

எந்த நேரத்தில் பால் பருகலாம்?

இரவு தூங்குவதற்கு முன் மிதமான சூட்டில் பால் குடிப்பது, நம் மனதை அமைதியாக உணர வைப்பதுடன், நல்ல உறக்கம் பெறவும் உதவுகிறது என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

எந்த நேரத்தில் பால் பருகலாம்?
பால் குடிப்பதால் நமது உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் புரதச்சத்துகள் கிடைக்கின்றன. ஆனால் எந்த நேரத்தில் பால் பருகுகிறோம் என்பது முக்கியம் என்கிறார்கள், உணவியல் நிபுணர்கள்.

அன்றாடம் காலை, இரவு நேரங்களில் பால் குடிப்பது நல்லது. ஆனால் ஆயுர்வேதத்தில் இரவு நேரத்தில் பால் குடிப்பதுதான் மிகவும் நல்லது என்று தெரிவிக்கப்படுகிறது.

நாம் காலை வேளையில் பால் குடிப்பதால் அன்றைய நாளுக்குத் தேவையான புரதச்சத்து நமது உடலுக்கு முழுமையாகக் கிடைக்கிறது.

உடலின் தசைகளை வலுப்படுத்துபவர் கள், அதிகாலை வேளையில் பால் குடித்துவிட்டு, பின் இரவு உணவுக்குப் பிறகு குடிப்பது சிறந்தது.

இரவு தூங்குவதற்கு முன் மிதமான சூட்டில் பால் குடிப்பது, நம் மனதை அமைதியாக உணர வைப்பதுடன், நல்ல உறக்கம் பெறவும் உதவுகிறது என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

உடல் பருமன் அதிகமாக இருப்பவர்கள் இரவு நேரத்தில் அதிகமாக பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

காரணம், பால் அவர்களுக்கு உடலில் கொழுப்புகளை அதிகரிக்கச் செய்வதுடன், சிலருக்கு செரிமான பிரச்சினை களையும் ஏற்படுத்தலாம். 201702041111320542 Which time drink a cup of milk SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button