அசைவ வகைகள்

சூப்பரான சைடு டிஷ் லெமன் ஃபிஷ் பிரை

குழந்தைகளுக்கு மீன் மிகவும் பிடிக்கும். சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு சூப்பரான சைடு டிஷ் லெமன் ஃபிஷ் பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சூப்பரான சைடு டிஷ் லெமன் ஃபிஷ் பிரை
தேவையான பொருட்கள் :

மீன் துண்டுகள் – அரை கிலோ (துண்டு மீன்)
சின்னவெங்காயம் – 50 கிராம்
இஞ்சி-பூண்டு விழுது – ஒன்றரை டீஸ்பூன்
பச்சைமிளகாய் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு

மீனை ஊற வைப்பதற்கு:

எலுமிச்சைச் சாறு – அரை டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

81278383 D68B 43B4 833E B992092C8E93 L styvpf

செய்முறை :

* சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மீனை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து அதிலிருக்கும் நீரை வடித்து வைத்துக்கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் கழுவிய மீனை போட்டு அதனுடன் எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு பிரட்டி 30 நிமிடங்கள் ஊறவிடவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய சின்ன வெங்காயம், நறுக்கிய பச்சைமிளகாயை சேர்த்து நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்றாக வதக்கவும்.

* அடுத்து அதில் மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கிவிட்டு, கலவையை பேனில் சமமாக பரப்பி அதன் மேல் மீன் துண்டுகளை வைத்து அடுப்பை சிறு தீயில் வைத்து மூடி போட்டு வேக விடவும்.

* மீன் ஒரு புறம் வெந்தவுடன் திருப்பிப் போட்டு மறுபுறமும் வேக விட்டு இறக்கவும்.

* மீனுடன் மசாலாக் கலவையும் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

* லெமன் ஃபிஷ் பிரை, சாதத்துடன் சாப்பிட சுவையான சைடு டிஷ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button