ஆரோக்கிய உணவு

வயிற்று உபாதைகளுக்கு உகந்த வெந்தயக் குழம்பு

வயிற்று கோளாறு, உடல் சூட்டால் அவதிப்படுபவர்கள் இந்த குழம்பை வாரம் இருமுறை செய்வது சாப்பிடலாம். இப்போது இந்த குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

வயிற்று உபாதைகளுக்கு உகந்த வெந்தயக் குழம்பு
தேவையான பொருட்கள் :

வெந்தயம் – ஒரு கைப்பிடி அளவு,
சின்ன வெங்காயம் – 50 கிராம்
பூண்டு – 20 பற்கள்,
புளி – நெல்லிக்காய் அளவு,
காய்ந்த மிளகாய் – ஒன்று,
கறிவேப்பிலை – சிறிதளவு,
குழம்பு மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
அரிசி மாவு – ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* புளியை கரைத்து கொள்ளவும்.

* சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெந்தயம், கிள்ளிய காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின் சின்ன வெங்காயம், பூண்டை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் கரைத்த புளியை ஊற்றி கொதிக்க விடவும்.

* பிறகு உப்பு, மஞ்சள்தூள், குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

* கொதித்து, நன்கு மணம் வந்ததும் இறக்கி கறிவேப்பிலை சேர்க்கவும். (குழம்பு ரொம்ப நீர்க்க இருந்தால் ஒரு டீஸ்பூன் அரிசி மாவை நீரில் கரைத்து சேர்த்து, 5 நிமிடம் கழித்து இறக்கவும்).

* சூப்பரான வெந்தயக்குழம்பு ரெடி.201702231038436947 vendhaya kulambu SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button