ஆரோக்கிய உணவு

பழைய சாதம் சாப்பிட்டால்…பஞ்சாய் பறந்து விடும் நோய்கள்

அரிசி இந்தியாவின் அடிப்படை உணவு. ஒரு கைப் பிடி சாதம் உண்டு அதன் மூலமே ஜீவிக்கும் எத்தனையோ வயிறுகள் இந்தியாவில் உள்ளன. ஆக அரிசி உயிர் காக்கும் அமிர்தம். வேத காலத்தில் லட்சம் வகை அரிசிகள் இருந்ததாக கூறப்படுகின்றது. இன்றும் சுமார் அரிசியில் 200 வகை பிரிவுகள் இருப்பதாக சொல்கின்றனர்.
எந்த வகை அரிசியும் தோல் நீக்கப்பட்ட நிலையில் பிரவுன் அரிசிதான். இதில் 15 வகை அவசிய சத்துக்கள் உள்ளன.
* வைட்டமின்கள் பி1, 2, 3, 6, ஈ, கே என இருப்பது இயற்கை நமக்களித்த வரம். எவ்வளவு காசு கொடுத்தாலும் இப்படி கிடைக்காது.
* நார்சத்து மிக அதிகம் இருப்பதால் இருதய பாதிப்பினை தவிர்க்கின்றது. மலச்சிக்கலை நீக்குகின்றது.
* 88 சதவீத மங்கனீஸ் சத்து உள்ளது. இது உடலுக்கு சக்தியினையும், நோய் எதிர்ப்பு சக்தியினையும் அளிக்கின்றது.
* இதில் உள்ள எண்ணெய் சத்து கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்பு சத்தினை குறைக்கின்றது.
* 27.3 சதவீத உள்ள செலினியம் குடல் புற்றுநோய் பாதிப்பினை தவிர்க்கின்றது. நீரிழிவு 2 பிரிவினை தவிர்க்கின்றது.
* நீரிழிவு பாதிப்பு உடையோருக்கு சர்க்கரை அளவை வெகுவாய் கட்டுப்பாட்டில் வைக்கின்றது.
* மாதவிடாய் நின்ற பெண்களுக்கு பிரவுன் அரிசி அவசியமே.
* இதிலுள்ள நார் சத்து பித்தப்பையில் கற்கள் உண்டாவதை தடுக்கின்றது.
* பிரவுன் அரிசி சைவ உணவில் சத்துக்கள் நிறைந்த உணவு.
* தைராய்டு செயல்பாட்டிற்கு உதவுகின்றது.
* இதிலுள்ள மக்னீசயம் ரத்த ஓட்டத்தினை சீராக்குகின்றது.
* எலும்புகள் வலுவாகவும் உறுதியாகவும் இருக்கின்றன.
* திசுக்கள் காக்கப்படுகின்றன.
* உடல் எடை கூடாது இருக்கின்றது.
* ஆஸ்த்மா, வலி, வீக்கம், மூட்டு வலி இவை கட்டுப்பாட்டிற்குள் வருகின்றன.
* மார்மக புற்று நோய் தவிர்க்கப்படுகின்றது.
* தலைமுடி, பல், தசைகளுக்கு சத்து கிடைக்கின்றது.
* நரம்பு மண்டலம் பலப்படுகின்றது. மன நலம் நன்கு காக்கப்படுகின்றது.
* க்ளூடன் அலர்ஜி உள்ளவர்கள் இதனை நன்கு எடுத்துக் கொள்ளலாம்.
தண்ணீர் ஊற்றிய பழைய சாதம் எனும் அமிர்தம் :
பொதுவாக வீட்டில் சாதம் மீந்து விட்டால் இரவில் அதில் தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் காலை மோர், பச்சை வெங்காயம், மோர் மிளகாய் அல்லது ஊறுகாய் சேர்த்து சாப்பிடுவது கிராம புறங்களில் அதிகம் காணப்படும் ஒன்று. நிறைய பேர் இதனை விரும்பி சாப்பிடுவார்கள். பலர் பொருளாதார நிலை காரணம் எனக் கூறி உண்பர். வயல் வேலை செய்பவர்கள் உடல் குளிர்ச்சிக்காக வேண்டி உண்பர். நகர்புறங்களில் நாகரீகம் என்ற பெயரில் பிரட், சீரிவல், இட்லி, தோசை என மாறி விட்டது.
ஆனால் பலரும் அறியாத ஒரு உண்மை, முதல் நாள் இரவு நீர் ஊற்றிய இந்த சாதம் ஓர் அமிர்தம் என்பது தான். சமைத்த 100 கி. சாதத்தில் 3.4 மிகி அளவே இரும்பு சத்து உள்ளது. இதே சாதம் 12 மணி நேரம் தண்ணீர் ஊறிய பிறகு இரும்பு சத்து சுமார் 72 மிகி வரை அதிகரிக்கின்றது. அதே போல் சமைத்த சாதத்தில் சுமார் 475 மிகி வரை சோடியம் உப்பு உள்ளது.
அதுவே பழைய சாதத்தில் 303 மிகி என குறைகின்றது. சோடியம் குறைவது உடலுக்கு ஆரோக்கியமானது. பொட்டாசியம் அளவு 840 மிகி வரை உயர்கின்றது. கால்சியம் அளவு சுமார் 20 மிகி-ல் இருந்து 850 மிகி ஆக உயர்கின்றது என ஆய்வுகள் கூறுகின்றன. பழைய சாதம் செரிமானத்திற்கும் பெரிதும் உதவுகின்றது. பலரும் இதனை வெயில் காலத்திற்கேற்ற உணவாக உட்கொள்கின்றனர். அமெரிக்க சத்துணவு ஆய்வாளர் இந்த பழைய சாதத்தினைப் பற்றி கூறும் பொழுது கீழ்கண்ட ஆய்வு முடிவுகளை குறிப்பிட்டுள்ளார்.
* பழைய சாதம் காலை உணவாக கொள்வது உடலை லேசாகவும் சத்து கொண்டதாகவும் இருக்கச் செய்கின்றது.
* உடலுக்குத் தேவை யான நல்ல பாக்டீரியாக்கள் அதிக அளவில் உற்பத்தி ஆகின்றன.
* வயிறு நோய்கள் நீங்குகின்றன. இதிலுள்ள நார்சத்து உடலை சக்தியோடு வைக்கின்றது.
* மலச்சிக்கல் நீங்குகின்றது.
பழைய சாதம் சாப்பிட்டால்…பஞ்சாய் பறந்து விடும் நோய்கள்
* ரத்தக் கொதிப்பு வெகுவாய் கட்டுப்படுகின்றது. அதிக சோர்வு தாக்குதல் ஏற்படுவதில்லை. அனைத்து வகை புண்கள் நீங்குகின்றன. அலர்ஜி பாதிப்புகள் தவிர்க்கப்படுகின்றன. முதுமை தோற்றம் குறைகின்றது. காபி, டீ என்ற எண்ணம் வெகுவாய் குறைகின்றது. உள் உறுப்புகளின் அதிக வேலை குறைகின்றது. வைட்டமின் பி6, பி12 அதிகமாக கிடைக்கின்றது என ஆய்வுகள் கூறுகின்றன.
இந்த சாதத்தினை மண் சட்டியிலோ அல்லது கல் சட்டிலோ நீர் ஊற்றி வைத்து சாப்பிடுவது சிறந்தது என இயற்கை மருத்துவத்திலும், ஆயுர் வேதத்திலும் அறிவுறுத்தப்படுகின்றது.53160

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button