ஆரோக்கிய உணவு

குழந்தைகளுக்கு சத்தான கேழ்வரகு – வாழைப்பழ ஸ்மூத்தி

காலையில் பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு அன்றைய தினம் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க சத்து நிறைந்த இந்த கேழ்வரகு ஆப்பிள் ஸ்மூத்தியை செய்து கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு சத்தான கேழ்வரகு – வாழைப்பழ ஸ்மூத்தி
தேவையான பொருட்கள் :

ராகி மாவு – அரை கப்,
ஆப்பிள் – ஒன்று,
வாழைப்பழம் – 1
பால் – அரை கப்,
தயிர் – 3 ஸ்பூன்
தேன் – 2 மேசைக்கரண்டி
ஐஸ்கட்டிகள் – தேவைக்கு


செய்முறை :

* ஆப்பிள் விதைகளை எடுத்து விட்டு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

* பாலை கொதிக்க வைத்து ஆற வைத்து கொள்ளவும்.

* ராகி மாவை 2 கப் நீரில் கரைத்து கொள்ளவும்.

* அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து கரைத்த ராகி கரைசலை அதில் ஊற்றி கெட்டியாகும் வரை கைவிடாமல் கிளற வேண்டும். கெட்டியானதும் இறக்கி ஆற விடவும்.

* பின்னர் மிக்சியில் பால், தயிர், ராகி கூழ், வாழைப்பழம், ஆப்பிள், தேன், ஐஸ்கட்டிகள் சேர்த்து நன்றாக அடித்து கலக்கவும்.

* அரைத்த ஸ்மூத்தியை கண்ணாடி கப்பில் ஊற்றி பரிமாறவும்.

* சத்து நிறைந்த கேழ்வரகு ஆப்பிள் ஸ்மூத்தி ரெடி.201704130907369012 how to make Ragi banana smoothie SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button