சிற்றுண்டி வகைகள்

குழந்தைகளுக்கு சத்தான பிரெட் ஃப்ரூட் ரோல்

குழந்தைகளுக்கு காலையில் கொடுக்க சத்தான பிரெட் ஃப்ரூட் ரோல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு சத்தான பிரெட் ஃப்ரூட் ரோல்
தேவையான பொருட்கள் :

கோதுமை பிரெட் – 5 ஸ்லைஸ்,
பொடியாக நறுக்கிய ஆப்பிள் – 2 டீஸ்பூன்,
நறுக்கிய ஆரஞ்சு, கிவி, பப்பாளி, வாழைப்பழம் மற்றும் திராட்சைப்பழம் தலா – 2 டீஸ்பூன்,
முந்திரி, உலர் திராட்சை (சேர்த்து) – 4 டீஸ்பூன்,
மில்க்மெய்ட் – 5 டீஸ்பூன்,
தேன் – சிறிதளவு,
சில்வர் பேப்பர் (ஃபாயில் பேப்பர்) தேவைக்கேற்ப.

செய்முறை:

* முந்திரி, உலர் திராட்சை மற்றும் எல்லா பழங்களையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.

* பிரெட் துண்டுகளை ஓரம் வெட்டிக்கொள்ளவும்.

* பிரெட் மீது மில்க்மெய்ட் ஒரு டீஸ்பூன் தடவி நடுவில் கொஞ்சம் பழக்கலவை, சிறிது தேன் சேர்த்து பரப்பவும்.

* பிரெட்டை சில்வர் பேப்பர் மீது வைத்து இறுக்கமாக ரோல் செய்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுத்துப் பரிமாறவும்.

* பிரெட் ஃப்ரூட் ரோல் ரெடி.201611250747132958 nutritious bread fruit roll SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button