ஆரோக்கியம் குறிப்புகள்

குழந்தைகளுக்கு முன் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்..! தெரிந்துகொள்ளுங்கள் !

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை போன்றது; தம்பதியர் குழந்தைகளை பெற்று எடுத்து விட்டால் மட்டும் போதாது, காலம் உள்ள வரை குழந்தையை நல்ல முறையில் வளர்த்து, அதை காப்பாற்றவும் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு முன் எதை செய்ய வேண்டும், எதை செய்ய கூடாது, நீங்கள் செய்யும் விஷயங்களால் அவர்கள் என்ன கற்றுக்கொண்டு எப்படி நடந்து கொள்வர் போன்ற விஷயங்களை பற்றி சிந்தித்து செயலாற்றுவது தான் நல்ல பெற்றோருக்கு அழகு!

குழந்தைகளுக்கு முன் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் அதாவது குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர்கள் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி இந்த பதிப்பில் படித்து அறியலாம்.

சண்டை சச்சரவு!

பெற்றோர்கள் குழந்தைகள் முன்னிலையில் கண்டிப்பாக தங்களின் தம்பதியர் சண்டையை காட்டிக் கொள்ள கூடாது; மேலும் குடும்பத்தில் நிகழும் தகராறுகளை கூட குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர்கள் அவசியம் தவிர்க்க வேண்டும். குழந்தைகள் இந்த சண்டை சச்சரவு காட்சிகளை கண்டு வளர்வது அவர்களின் மனநிலையை கெடுத்து, அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சியை பாதிக்கும்; எனவே பெற்றோர்கள் இந்த விஷயத்தை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

புறம் பேசுதல்!

குழந்தைகள் முன்னிலையில் உங்களின் உறவுகளை பற்றி, நண்பர்களை பற்றி, அக்கம் பக்கத்தாரை பற்றி என புறம் பேசுதல் குழந்தைகளின் மனதில் அந்த பழக்கம் சரியென தோன்ற செய்யும் அல்லது உங்கள் மீதான மரியாதை குழந்தையின் மனதில் குறைந்து விடும். சில பெற்றோர்கள் குழந்தைகளிடமே கூட தங்கள் மனக்குறையை புறங்கூறலாக வெளிப்படுத்துவர்.

இது எல்லாம் தவறான செய்முறை; ஆகையால் பெற்றோர்கள் தங்களின் இந்த பழக்க வழக்கத்தை அறவே தவிர்க்க வேண்டும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

தீச்சொற்கள் வேண்டாம்!

தம்பதியர் தங்களுக்குள் நிகழும் சண்டையின் காரணமாக ஒருவரை ஒருவர் வசை பாடிக் கொள்வதை குழந்தைகள் முன்னிலையில் தயவு செய்து செய்யாதீர்கள்; நீங்கள் ஒருவரை ஒருவர் தீச்சொற்கள் கூறி திட்டிக்கொள்வது குழந்தைகளின் மனநிலையை பாதிக்கும் மற்றும் குழந்தைகள் இந்த தீய பழக்கத்தை கற்றுக்கொள்ள ஒரு வெளியாகி விடும். எனவே பெற்றோர்களே! நீங்கள் உதிர்க்கும் வார்த்தைகளில் கொஞ்சம் கவனம் செலுத்தவும்.

மிரட்ட வேண்டாம்!

குழந்தைகள் ஏதேனும் தவறு இழைத்தால் அவர்களை அடிப்பது, மிரட்டுவது போன்ற நடவடிக்கைளை பெற்றோர்கள் மேற்கொள்வது தவறு; இது போன்று நீங்கள் செய்வது உங்கள் மீது குழந்தைகளுக்கு வெறுப்பை உண்டாக்கி விடும். எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அடித்து, மிரட்டாமல் அன்பால் எந்த ஒரு விஷயத்தையும் சாதிக்க முயல வேண்டும்.

 

தவறான கருத்துக்கள்!

குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர் மற்றும் அவர்கள் பயிலும் பள்ளி என இவற்றை பற்றி தரக்குறைவாக அவர்களின் முன்னிலையில் பேசுதல் கூடவே கூடாது. குழந்தைகளின் நண்பர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் போன்றவர்கள் பற்றியும் தேவையில்லாத தவறான கருத்துக்களை குழந்தைகள் முன்னிலையில் பகிர்தல் கூடாது. இந்த விஷயங்களை பெற்றோர் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

அம்மா செய்யும் தவறு!

குழந்தைகளிடம் தாய் தனது கணவருக்கு தெரியாமல் செய்யும் விஷயத்தை குழந்தையின் முன்னிலையில் செய்து விட்டு, “டேய் கண்ணா அப்பாகிட்ட சொல்லிடாதாடா” என்று தனது தவறை மறைக்க குழந்தையின் துணியை நாடி, அதன் இயல்பை கெடுப்பது தவறு. ஓய்ந்த தவறை சில அப்பாக்களும் செய்வது உண்டு; ஆகையால் பெற்றோர் இருவரும் இந்த தவறை நிறுத்தி கொள்ள வேண்டும்!

மது, புகை!

குழந்தைகளின் முன்னிலையில் அப்பாக்கள் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற பழக்க வழக்கங்களை மேற்கொள்ள கூடாது; குழந்தைகள் உங்களை பார்த்து உனக்கிலை மாதிரியே இருக்க முயற்சி செய்து இந்த பழக்க வழக்கங்களை எல்லாம் உடனே கற்றுக் கொள்ளக்கூடும். ஆகையால் அப்பாக்களே! தயவு செய்து இந்த பழக்கங்களை குழந்தைகளின் முன்னிலையில் தவிர்த்து விடுங்கள்!

 

லஞ்சத்தின் ஆரம்பம்!

குழந்தைகளுக்கு அவர்கள் செய்யும் வேலைக்காக காசு கொடுத்து பழக்குதல் மிகவும் தவறான பழக்கம் ஆகும். குழந்தைகள் கடைக்கு சென்று வருவதற்கு, பக்கத்துக்கு வீட்டில் ஏதேனும் பொருளை கொடுத்து விட்டு வருவதற்கு என காத்து கொடுப்பது, சாக்லேட் போன்ற குழந்தைகளுக்கு பிடித்த மற்றும் தேவைப்படும் பொருட்களை கொடுத்து பழக்குதல் மிகவும் தவரூஹை பெற்றோர்கள் தவிர்த்து விடுதல் நல்லது.

சரியான பெற்றோர்!

குழந்தைகளுக்கு முன்னால் மேற்கண்ட செயல்களை செய்யாமல் தவிர்த்து, குழந்தைகளை படிக்க சொல்லி கொல்லாமல், அவர்கள் படிக்கவில்லை எனில் ‘மாடு தான் மேய்ப்பாய்’ என்று சபிக்காமல், மற்ற குழந்தைகளுடன் உங்கள் குழந்தையை ஒப்பிட்டு பேசி காயப்படுத்தாமல் இருப்பதே நல்ல பெற்றோருக்கான அடையாளம். குழந்தைகளை அன்பாக கண்டித்து, அவர்களை அறவழியில் வாழ்வில் முன்னேற ஊக்குவியுங்கள்! சிறந்த பெற்றோராக திகழுங்கள்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button