​பொதுவானவை

பணியிடங்களில் ஏற்படும் பாலியல் தொந்தரவை சமாளிக்க வழிகள்

பணியிடங்களில் ஏற்படும் பாலியல் தொந்தரவை சமாளிக்க வழிகள்
பெண்களை தங்களின் காம இச்சைக்கு பயன்படுத்தவே பல ஆண்களும் முயல்கின்றனர். இன்றைய காலகட்டத்தில், பாலியல் சம்பந்தமான கிண்டலும், பாலியல் தொந்தரவுகளும் பரவலாக நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது.இது நாளுக்கு நாள் அதிகரிக்கிறதே தவிர முடிவுக்கு வருகிற மாதிரி தெரியவில்லை. மிக கொச்சையான நகைச்சுவைகள், கிண்டல் கேலிகள் அல்லது அருவெறுக்கத்தக்க பேச்சு போன்றவைகளும் பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொந்தரவுகளே. இதனை கையாள சிறந்த வழி, இவ்வகையான ஆண்களை புறக்கணித்து விடுங்கள்.அதற்கு காரணம், இவர்கள் எல்லாம் தம் மீது கவனம் விழ வேண்டும் என எண்ணி இதை செய்பவர்கள்.  பணியிடத்தில் பாலியல் தொந்தரவுகளை கையாள வேண்டுமானால் உங்களை சீண்டுபவர்களின் போக்கையே நீங்களும் கடைப்பிடிக்க வேண்டும். அவ்வளவு தான், தன்னாலே அவர் வாய் மூடிக்கொள்ளும்.சில நேரங்களில் பணியிடத்தில் பாலியல் ரீதியாக ஜோக் அல்லது கிண்டல் செய்பவர்கள், அதனை உணர மாட்டார்கள். அது அவர்களுக்கு இயல்பான ஒன்றாக தெரியும். அப்படிப்பட்ட சூழல்களில், அவர்களிடம் தனியாக பேசி, அவர்களின் இந்த பேச்சினால் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள்.

பாலியல் தொந்தரவு செய்பவர்கள் பற்றி உயர் மட்ட நிர்வாகத்திடம் சென்று உங்கள் குறைகளை தெரிவியுங்கள். அதற்கு பிறகு நீங்கள் எதை பற்றியும் கவலை படத்தேவையில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button