சிற்றுண்டி வகைகள்

சத்தான கறிவேப்பிலை அடை செய்வது எப்படி

சத்தான கறிவேப்பிலை அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்தான கறிவேப்பிலை அடை செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

பச்சரிசி – அரை கப்
துவரம்பருப்பு – அரை கப்
பாசிப்பருப்பு – அரை கப்
கடலைப்பருப்பு – அரை கப்
உளுந்து – கால் கப்
காய்ந்த மிளகாய் – 6
கறிவேப்பிலை – 2 கைப்பிடியளவு
சின்ன வெங்காயம் – 50 கிராம்
பூண்டு – 10 பல்
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பச்சரிசி, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் உளுந்தை ஆகியவற்றை 1 மணிநேரம் ஊறவைத்து அதனுடன் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து அடை மாவு பதத்துக்கு கொரகொப்பாக அரைத்துக்கொள்ளவும்.

* அரைத்த மாவில் வெங்காயம், உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், பூண்டுப்பல் சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.

* அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்துப் பரிமாறவும்.

* சுவையான சத்தான கறிவேப்பிலை அடை ரெடி.201608160805463589 How to make nutritious curry leaves adai SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button