சைவம்

கத்தரிக்காய் பொரியல் கறி

தேவையான பொருட்கள்

1/2 இறாத்தல் பிஞ்சுக் கத்தரிக்காய்

5 நறுக்கிய சின்ன வெங்காயம்

4 துண்டு பண்ணிய பச்சை மிளகாய்

1 சிறுகிளை கறிவேப்பிலை

4 நறுக்கிய உள்ளிப்பூண்டு நகம் cloves of garlic

1 அங்குல இஞ்சி தட்டி எடுத்து crushed

4-5 கிராம்பு Clove

1 அங்குலம் கறுவாப்பட்டை Cinnamon stick

3 ஏலக்காய் Cardamom

10-15 கடுகு

½ தேயிலை கரண்டி வெந்தயம்

1 தேயிலை கரண்டி சீரகம்

1 கோலி உருண்டை பழப்புளி marble size

1 தேயிலை கரண்டி சீனி அல்லது சர்க்கரை

1/2 மேசைக்கரண்டி மஞ்சள் தூள்

1 மேசைக் கரண்டி கறி மிளகாய்த்தூள்

1 கோப்பை தேங்காய்பால்

1 மேசைக்கரண்டி சமையல் எண்ணெய்

உப்பு தேவையான அளவு

தயாரிப்பு முறை

கத்தரிக்காயைக் கழவி 2 அங்குலத்துண்டுகளாக நறுக்கி சுமார் 5 நிமிடங்கள் வரை தண்ணீரில் ஊறவிடவும். பின்னர் நீரில் இருந்து அகற்றி, லேசாகப் பிழிந்து, நீரை அகற்றி, மஞ்சள் மற்றும் உப்பும் சேர்த்துப் பிரட்டவும்

சுடான கொதி எண்ணெய்த் தாழியில் உடன் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து பக்கத்தில் வைத்துக்கொள்ளவும்

பழப்புளியை சற்று சூடான ½ கோப்பை நீரில் குழைத்து, புளிச்சாறை வடித்துக்கொள்ளவும்.

ஒரு தட்டையான சட்டியில் மத்திய சூட்டில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம் மிளகாய்த்துண்டுகளை பொரித்து உடன் வெந்தயம்,கடுகு,சீரகம்,கறுவா,ஏலம்,கிராம்பு போன்றவற்றைப் போட்டு கறிவேப்பிலை சேர்த்து 1-2 நிமிடம் வறுக்கவும். பின்னர் சமையல் எண்ணெய் உடன் சேர்த்துக்கிளறவும்.

அடுத்து வடித்து எடுத்த புளியம் ரசம், கறித்தூள் (யாழ்ப்பாணத்தார் மிளகாய்க் கறித்தூள்) உப்பும் சேர்த்துக்கொள்ளவும். பின்னர் 2-3 நிமிடங்களுக்கு பொரித்த கத்தரிக்காய்களையும் சேர்த்துக் கொதிக்க விடவும். அடுத்து தேங்காய்ப்பால், மற்றும் சீனி அல்லது சர்க்கரை சேர்த்து மூடி மேலும் 5 நிமிடங்கள் அடுப்பில் மத்திம சூட்டில் கொதிக்கவிடவும்.

கத்தரிக்காய்ப் பொரியல் கறியைச் சோறு, இடியப்பம், புட்டு போன்றவற்றுடன் பரிமாறலாம்.
fried eggplant

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button