முகப் பராமரிப்பு

மூன்றே நாட்களில் கருப்பான முகத்தை வெள்ளையாக்க சில வழிகள்!

பிரச்சனைகளை அதிகமாக எண்ணெய் பசை சருமத்தினர் தான் சந்திப்பார்கள். அதில் முகப்பரு தான் முதன்மையானது. அதோடு அவர்களது முகத்தில் எந்நேரமும் எண்ணெய் வழிந்தவாறு இருப்பதால், அவர்களின் முகம் பொலிவிழந்து, ஒருவித கருமையாக காணப்படும். எனவே எண்ணெய் பசை சருமத்தினால் முகப்பொலிவை இழந்து இருப்போரின் முகத்தை பளிச்சென்று வெள்ளையாக்க சில இயற்கை வழிகளை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அதைப் படித்து பின்பற்றினால், நிச்சயம் நீங்கள் அழகாகவும், வெள்ளையாகவும் ஜொலிக்கலாம்.

எலுமிச்சை சாறு 4 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

கற்றாழை ஜெல் 3 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.
ஆரஞ்சு ஜூஸ் மற்றும் மஞ்சள் தூள் 2 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸில், 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.
தக்காளி சாறு 4 டீஸ்பூன் தக்காளி சாற்றினை எடுத்துக் கொண்டு, அத்துடல் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும்.
க்ரீன் டீ மற்றும் தேன் குளிர்ந்த க்ரீன் டீ நீர்மத்தில் சிறிது தேன் மற்றும் அரிசி மாவு சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்து, பின் உலர வைத்து கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் வெளியேறி, முகத்தின் பொலிவு மேம்படும்.
ஓட்ஸ் மற்றும் தயிர் 2 டேபிள் ஸ்பூன் தயிரில், 3 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடி மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.
whiten skin 25 1456383055

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button