கர்ப்பிணி பெண்களுக்கு

பிரசவத்திற்கு பின் ஏற்படும் கூந்தல் உதிர்தலைத் தடுக்க சூப்பர் டிப்ஸ்!!!

பிரசவம் முடிந்த பின்பு பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பல. ஆனால் அவற்றில் உடல் எடை அதிகரிப்பதும், கூந்தல் உதிர்தலும் தான் முதன்மையானவை. அதிலும் இந்த பிரச்சனைகள் குழந்தை பிறந்து 5 மாதம் வரை அதிகம் இருக்கும். மேலும் நமது பாட்டிகள் உங்கள் குழந்தை உங்களை பார்த்து சிரிக்க சிரிக்க கூந்தல் உதிர்தல் அதிகம் இருக்கும் என்று சொல்வார்கள்.

ஆனால் உண்மையில் ஹார்மோன்களின் மாற்றத்தினால் தான் கூந்தல் உதிர்தல் ஏற்படுகிறது. ஆகவே பிரசவத்திற்கு பின் சற்று அதிக அளவில் கூந்தலை கவனித்து பராமரித்து வந்தால், கூந்தல் உதிர்தலை குறைக்கலாம்.

இப்படி பிரசவத்திற்கு பின் தற்காலிகமாக உதிரும் கூந்தலை, கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை மனதில் கொண்டு செயல்பட்டு வந்தால், நிச்சயம் கூந்தல் உதிர்தலைக் குறைக்கலாம்.

ஆரோக்கியமான டயட்

பிரசவத்திற்கு பின் ஏற்படும் கூந்தல் உதிர்தலை ஆரோக்கியமான டயட்டை பின்பற்றுவதன் மூலம் குறைக்கலாம். இப்படி ஆரோக்கியமான டயட்டை பின்பற்றுவதால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, மயிர்கால்கள் வலுவுடன் இருந்து, முடி உதிர்வதைத் தடுக்கும்.

எண்ணெய் மசாஜ்
பிரசவம் முடிந்த பின்ன முடி உதிர்வது அதிகம் இருந்தால், வெதுவெதுப்பான எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டமானது அதிகரித்து, மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடி உதிர்வது நிற்கும்.

ஹேர் ஸ்டைல் வேண்டாம் பிரசவத்திற்கு பின்னர் எந்த ஒரு ஹேர் ஸ்டைலையும் பின்பற்ற வேண்டாம். மேலும் எந்த ஒரு ஹேர் ஸ்டைல் கருவிகளையோ அல்லது ஹேர் டை போன்றவற்றையோ பயன்படுத்த வேண்டாம். இதனால் கூந்தலுக்கு அதிகப்படியான அழுத்தம் கொடுக்கப்பட்டு, கூந்தல் இன்னும் உதிரும். எனவே இதுப்போன்று எதையும் மேற்கொள்ள வேண்டாம்

மன அழுத்தத்தை தவிர்க்கவும் கூந்தல் உதிர்வதால் சிலர் அதிகம் கவலை கொள்வார்கள். அப்படி கவலை கொண்டால், கூந்தல் தான் இன்னும் உதிரும். எனவே கூந்தல் உதிர்வதைக் கண்டு கவலை கொள்ளாமல், மனதளவில் தைரியமாக இருக்க வேண்டும். இதனால் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படாமல், சீராக இருக்கும்.dietpostnatal

வெந்தயம் வெந்தயத்தை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, காலையில் அதனை மென்மையாக அரைத்து ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து அலசினால், கூந்தல் உதிர்வது நின்றுவிடும்.

தேங்காய் பால் தேங்காய் பால் கூட கூந்தல் உதிர்தலை தடுக்கும். அதற்கு தேங்காய் பாலை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவினால், முடி உதிர்வதைக் குறைக்கலாம்.

சரியான சீப்பு பிரசவத்திற்கு பின் கூந்தல் வலுவின்றி இருப்பதால், இக்காலத்தில் நெருக்கமான பற்கள் கொண்ட சீப்பை பயன்படுத்த வேண்டாம். மேலும் கூந்தல் ஈரமாக இருந்தால், அப்போது கூந்தலுக்கு சீப்பை பயன்படுத்தவே கூடாது. இல்லாவிட்டால், இது கூந்தல் உதிர்தலை இன்னும் அதிகரித்துவிடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button