மருத்துவ குறிப்பு

இதோ எளிய நிவாரணம்! சிறுநீர் கசிவு பிரச்னைக்கு தீர்வு என்ன?

வயதானவர்களுக்கு சிறுநீர்க் கசிவு ஏற்படுவது, சாதாரண விஷயம் அல்ல. கர்ப்ப காலத்தில், பெண்களுக்கு, சிறுநீர் பையின் தசைகள் பலவீனமாகி விடும். அதனால், சிறுநீர் கசிவு ஏற்படும். 40 வயதிற்கு மேலானவர்களுக்கு எல்லாம், இந்த பிரச்னை இருக்கும் என்று சொல்வதில் உண்மையில்லை.

போதுமான இடைவெளி இல்லாமல், பல குழந்தைகள் பெற்ற முந்தைய தலைமுறை பெண்களுக்கு, சிறுநீர்ப் பையின் தசைகள் வலிமை இழப்பதால், இந்த பிரச்னை இருந்தது.
இந்த காரணம் தெரியாமல், குறிப்பிட்ட வயதிற்கு மேல் பெண்களுக்கு சிறுநீர் கசிவு இயல்பு என்று பாதிக்கப்பட்டவர், தன் மகளிடம் சொல்லி, அவர் தன் மகளுக்கு அதையே சொல்லி, உண்மை தான் என்று நம்பி விட்டோம்.
சிறுநீர் கசிவு பிரச்னைக்கு இன்னொரு காரணம், அடிவயிற்றைச் சுற்றி கொழுப்பு அதிகரித்து. அந்தப் பகுதியில் உள்ள தசைகள் சரியாக வேலை செய்யாமல், சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றோடு, சிறுநீர் கசிவும் ஏற்படும். சிறுநீர் கசிவில் நிறைய வகைகள் உள்ளன.
சிலருக்கு கட்டுப்பாடு இல்லாமல் போய், வந்து விடுமோ என்ற பயத்திலேயே அடிக்கடி பாத்ரூம் போவது, இருமினால், தும்மினால் சிறுநீர் தானாகவே கசிவது, வயதானால் சிறுநீர் வெளியேறும் பாதை அடைபட்டு, சிறுநீர் பை தசைகள் தளர்வாகி, கட்டுப்பாடு இல்லாமல் சிறு நீர் கசிவது, பொதுக் கழிப்பிடங்களை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு தொற்று ஏற்பட்டும் பிரச்னை வரலாம்.
வாழ்க்கை முறையில் மாற்றங்கள் செய்தாலே, இந்தப் பிரச்னையை பெருமளவு தவிர்க்க முடியும். குறிப்பாக, தரையில் அமர்ந்து எழுந்திருக்கும் போது, தசைகள் வலிமை பெறும். 625.500.5.900.160.90
யோகா செய்வது, அடிக்கடி காபி குடிப்பதை தவிர்ப்பது, மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்வது, இடுப்பு பகுதி தசைகளை வலிமைப்படுத்தும்
பயிற்சிகள் செய்வது போன்றவை, இப்பிரச்னையை தவிர்க்க உதவும்.
அதீத உடல் பருமன் இருந்தால், அறுவை சிகிச்சையின் மூலம், 20 கிலோ குறைத்தால், சிறுநீர் கசிவது தானாகவே சரியாகி விடும்.
முடியாத பட்சத்தில், எதனால் பிரச்னை ஏற்பட்டது என்பதை கண்டறிந்து, மருத்துவ முறையில் பிரச்னையை தீர்க்கவும் நல்ல மருந்துகள், எளிமையான மருத்துவ முறைகள் உள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button