ஆரோக்கிய உணவு

உயிரை பறிக்கும் நிச்சயம்?தயிர் சாப்பிடும் போது இந்த பழத்தை தெரியாமல் கூட சாப்பிட்டு விடாதீர்கள்!

பழங்கள் சாப்பிடுவது என்பது நமது ஆரோக்கிய வாழ்க்கைக்கான அவசியமான ஒன்றாகும். ஆனால் அனைத்து பழங்களையும் எல்லா நேரமும், எல்லாவற்றுடனும் சாப்பிடக்கூடாது.

ஏனெனில் சில பழங்களை தவறான பொருட்களுடன் சேர்த்து சாப்பிடும்போது அது மரணத்தை கூட ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

பலாப்பழம் சுவையும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் அதை சில பொருள்களுடன் சேர்த்து சாப்பிடும்போது அது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
பலாப்பழமும், தயிரும்

பலாப்பழத்தை தயிருடன் சேர்த்து ஒருபோதும் சாப்பிடக்கூடாது. இரண்டும் தனித்தனியாக இருக்கும்போது ஆரோக்கியமான பொருட்கள்தான் ஆனால் அவற்றை ஒன்றாக சாப்பிடும்போது அதனால் ஆபத்துகள் மட்டுமே ஏற்படும்.

நமது முன்னோர்கள் காலத்தில் இருந்தே பலாப்பழத்தையும், தயிரையும் ஒன்றாக சாப்பிடக்கூடாது என்று கூறுவார்கள்.

ஆயுர்வேதத்தில் இது மிகவும் ஆபத்தான உணவு சேர்க்கையாக கருதப்படுகிறது.
ஆபத்துகள்

ஆயுர்வேதத்தில் கூறியுள்ளபடி பலாப்பழத்தை தயிருடன் சேர்த்து சாப்பிடும்போது அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஒன்றோடொன்று கலந்து சில பிரச்சினைகளை உண்டாக்கும்.

இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிடும் போது இது செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தும் குறிப்பாக வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். இதனால் மேலும் சில சரும பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.
அறிவியல் உண்மைகள்

ஆயுர்வேதத்தின் படி இவை இரண்டும் ஆபத்தான உணவாக இருந்தாலும் விஞ்ஞானரீதியாக பார்க்கும் போது அவை ஆரோக்கியமான பொருளாகவே கருதப்படுகிறது.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தயிரில் பலாப்பழம் சேர்ப்பது அதன் தரத்தை அதிகரிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இது விஞ்ஞானிகளுக்கே வியப்பினை ஏற்படுத்தும் முடிவாகதான் இருந்துள்ளது.

இந்த இரண்டையும் சரியான அளவில் கலந்து சாப்பிடுவது உங்களுக்கு இருமடங்கு பலனை தரும். ஆனால் தவறான அளவில் சாப்பிடுவது பிரச்சினையைத்தான் உண்டாக்கும்.

Related posts

பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால் எற்படும் நன்மைகள் தெரியுமா?

nathan

காலைச் சிற்றுண்டியை தவிர்க்கிறீர்களா?

nathan

சளித்தொல்லைக்கு உகந்த தூதுவளை ரசம்

nathan

Leave a Comment

Live Updates COVID-19 CASES
%d bloggers like this: