ஆரோக்கிய உணவு

சூப்பர் டிப்ஸ்! தினமும் பூண்டை உட்கொண்டு வந்தால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டு தெரியுமா….?

பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், விட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன. ஆய்வுகளில் பூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது சக்தி வாய்ந்த ஆன்டி-பயாடிக்காக செயல்படுவதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது. பூஞ்சையால் ஏற்படக்கூடிய படர்தாமரை மற்றும் பாதப்படை போன்ற சரும தொற்றுக்கலை குணப்படுத்த பூண்டில் உள்ள அஜோன் என்ற ரசாயனம் பெரிதும் உதவுகிறது. நெஞ்சி வலி மற்றும் தனமித் துடிப்பு போன்ற இதய பிரச்சனைகளில் இருந்து நம் இதயத்தை பூண்டு பாதுகாக்கும்.

இதயத்தை காக்கும். பூண்டில் உள்ள சல்பர் கலந்த பொருட்கள், இரத்த குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும். மேலும் தமனித் தடிப்பு வளர்ச்சியையும் மெதுவாக்கும். அஜோனின் இரத்த உறைதல் எதிர்ப்பு குணங்களால், இதயத்திற்குள் இரத்த கட்டிகள் உருவாகாமல் தடுக்க உதவும்.

பூண்டு இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை அதிகமாக உள்ளது. தினமும் பூண்டை உட்கொண்டு வந்தால், பல வகையான புற்றுநோய் ஏற்படும் இடர்பாடு குறையும். பூண்டில் அல்லில் சல்பைடு என்ற பொருள் இருப்பதால் தான் புற்றுநோய் எதிர்ப்பியாக இது செயல்படுகிறது. அலர்ஜியால் ஏற்படும் அழற்சியை குணப்படுத்த பூண்டு உதவுகிறது.

பச்சையாக பூண்டை சாறு எடுத்து பருகினால், படை மற்றும் மூட்டப்பூச்சி கடியினால் ஏற்படும் அரிப்பை உடனடியாக நின்றுவிடும். சுவாச பாதை தொற்றுக்களின் தீவிரத்தை குறைக்க பூண்டு உதவிடும். ஆஸ்துமா, சுவாசிப்பதில் சிரமம் போன்ற நுரையீரல் கோளாறுகளுக்கும் இது பயனளிக்கும். நசுக்கிய பூண்டு மற்றும் கிராம்பை நேரடியாக பாதிக்கப்பட்ட பற்களில் போடுங்கள். இதில் பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் வலி நிவாரணி குணங்கள் அடங்கியுள்ளதால், பல் வலிக்கு நிவாரணம் அளிக்க இது உதவும். கொழுப்பை கரைக்கும் பூண்டு சாற்றை காலாணிகள் மற்றும் கையில் இருக்கும் மருக்களின் மீது தடவினால் நல்ல பலனை அளிக்கும்.

251649847085440f9d31e7e0ff3b4eeeea8a33944 75703516

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button