படிகாரத்தை வைத்து அழகு குறிப்புகள்

வழுக்கையாகிவிடுமோ என்று, அதிலும் இளவயது பெண்கள் மற்றும் ஆண்களின் பெரும்பிரச்சினையாக உருவெடுத்துவிடுகிறது, இந்த முடி கொட்டும் பாதிப்புகள்.

சாதாரணமாக தலைமுடி எல்லோருக்கும் தினமும் உதிரவே செய்யும், ஆயினும் அவை மீண்டும் வளர்ந்துவிடும் தன்மை மிக்கவை, தற்காலத்தில் சிலருக்கு, மிக அதிக அளவில் தலைமுடி உதிர்வதற்குக் காரணமாக இருப்பது, தலைக்கு குளிக்க உபயோகிக்கும் ஷாம்பூக்கள், அலோபதி எனும் மேலைமருந்துகள் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் சூழ்நிலை, மாறுபட்ட உணவுவகைகள் மற்றும் மன அழுத்தம் போன்றவையாக இருக்கலாம், இவற்றின் காரணமாக, அதிகமாக தலைமுடி உதிர்தல் பாதிப்பு ஏற்படுகின்றன. சிலருக்கு, தலைக்குத் தடவும் தேங்காயெண்ணை கூட காரணமாகிவிடுகிறது, அவற்றில் கலப்படம் இருப்பதால், .இதுபோன்ற பாதிப்புகளை சரிசெய்யும். தலையில் முடி நன்கு கருகருவென வளரச்செய்யும் ஆற்றல்மிக்க படிகாரம்.

செய்முறை

சோற்றுக் கற்றாழை மடல் ஒன்றை எடுத்து, அதில் உள்ள சதைப்பகுதியை எடுத்து, அதில் சிறிது தூளாக்கிய படிகாரத்தை மேலே இட்டு வைக்க, சோற்றுக்கற்றாழையின் சதைப்பகுதியில் உள்ள நீர், தனியே பிரிந்து இருக்கும். அந்த நீரை தனியே எடுத்து, அதே அளவில் நாட்டுச்செக்கில் எடுத்த நல்லெண்ணெய் கலந்து, நன்கு காய்ச்ச வேண்டும், தைலப்பதத்தில் இந்த எண்ணை காய்ந்ததும், எடுத்து வைத்துக்கொண்டு, தினமும் தலையில் தேய்த்து வரவேண்டும். சில நாட்களில், அதிக முடி கொட்டும் பாதிப்புகள் விலகி, தலைமுடி நன்கு வளர ஆரம்பிக்கும்.

முகக் கரும்புள்ளிகள், தழும்புகள் மறைய

முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் மற்றும் பருத்தழும்புகள், முகத்தை அவலட்சணமாக்கிவிடும், நச்சுக்கிருமிகள் வியர்வை வழியே வெளியேற முடியாத அளவில், முகத்திற்கு இடும் லோஷன்கள், கிரீம்கள் மற்றும் பவுடர் பூச்சுக்கள் தடுத்து, அவை தோல் பகுதியில் வெளியேற வழியின்றி கரும்புள்ளிகளாக மாறிவிடுகின்றன.

இந்த பாதிப்பை சரிசெய்ய, சிறிய படிகாரத்தை நீரில் நனைத்து, அதை முகத்தில் நன்கு மென்மையாக, கரும்புள்ளிகள், பருத்தழும்புகள் உள்ள இடங்களில் தேய்த்து வரவேண்டும்.

அதன் பின்னர் முகத்தை நன்கு நீர் விட்டு, கழுவி, படிகாரத்தூள் கலந்த நீரை, மீண்டும் ஒருமுறை, முகத்தில் நன்கு தடவி, சற்றுநேரம் கழித்து, முகத்தை வெறும் தண்ணீரில் சுத்தம் செய்துவர, கரும்புள்ளிகள், பருத்தழும்புகள் யாவும் மாயமாக மறைந்து விடும்.

Leave a Reply