ஆரோக்கிய உணவு

சூப்பரா பலன் தரும்!!மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த நன்னாரி வேரின் பயன்கள்…!!

நன்னாரி வேர் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப் படுகிறது. சிறுநீர் நன்றாகப் பிரிய வியர்வையைப் பெருக்கி உடலில் உஷ்ணத்தைத் தனித்து உடம்பை உரமாக்கக் கூடிய தன்மை உடையது.
ஒற்றை தலைவலி, செரிமானம், நாட்பட்ட வாத நோய், பித்த நீக்கம், மேக நோய், பால்வினை நோய் ஆகியவற்றிற்கு நன்னாரி நல்ல மருந்தாகும்.

நன்னாரி வேர் 5 கிராம் நன்கு அரைத்து 200 மி.லி. பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, மேக அனல், மேகவேட்டை, நீர்கடுப்பு, நீர் சுருக்கு, வறட்டு இருமல் ஆகியவை தீரும்.

நன்னாரி வேர்ப் பட்டையை நீரில் ஊறவைத்து தேவையான அளவு பாலும், சர்க்கரையும், கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, உடலைத் தேற்றுவதோடு நாட்பட்ட இருமலும், கழிசலும் நிற்கும்.
நன்னாரி வேர்ப் பொடியுடன் சோற்றுக் கற்றாழை சோறு சேர்த்து உண்ண விஷக் கடிகளால் உண்டாகும் பக்க விளைவுகள் நீங்கும்.

நன்னாரி வேர்ச்சூரணத்தைத் தேனில் குழைத்து உண்டு வர மஞ்சள் காமாலை குணமாகும்.

பச்சை நன்னாரி வேரை நீர் விட்டு அரைத்து பாக்களவு வெந்நீரில் தினம் காலையில் ஒரு வேளை கொடுத்து வர பற்களிலிருந்து வடியும் இரத்தம் நிற்கும்.

நன்னாரி வேரை நன்கு சுத்தம் செய்து அரைத்து, பசும்பாலில் அரைத்து, மூன்று தடவை பாலில் கரைத்து வடிகட்டி, தினமும் 3 வேளை 5 நாட்கள் உண்டு வந்தால் உதிரப்போக்கு தீரும்710 7582

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button