ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த ஆளி விதையின் நன்மைகள்..!

ஆளி விதையில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பல்வேறு குணங்கள் உள்ளன. ஒரு தேக்கரண்டி ஆளி விதையில் 1.8 கிராம் அளவிற்கு ஒமேகா-3 உள்ளது. ஆளி விதையில் உள்ள நார்ச்சத்து, கரையும் தன்மை அற்ற நார்ச்சத்து இரண்டுமே பல வகைகளில் நமக்கு நன்மை செய்யும். கொலஸ்ட்ராலை குறைக்கும். மலச்சிக்கல் ஏற்படுத்தாது. சர்க்கரை வியாதியைக் குறைக்கும்.
ஆளி விதையைப் பொடி செய்து வைத்துக் கொண்டால் பழங்களில் இருந்து செய்யும் ‘ஸ்மூத்தி’, மில்க் ஷேக், தயிர், லஸ்ஸி, கஞ்சி போன்றவற்றில் சேர்க்கலாம்.

இதில் அதிக அளவு எதிர்க்காரணிகள் (Anti Oxidants) உள்ளதால், மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றை எதிர்த்து செயல்படும் திறன்கள் இந்த ஆளி விதைக்கு உள்ளன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன .

தினமும் உட்கொண்டால் புற்றுநோய்க் கட்டிகள் உருவாகாது. வந்தவர்கள் உட்கொண்டால் கட்டிகள் மேலும் பெருகாது என ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தினமும் ஆளி விதை உட்கொண்டால் மூட்டுவலியைக் குறைக்கும். சருமத்துக்கும் நமது தலைமுடிக்கும் மினுமினுப்பைத் தரும்.
ஆளி விதையை வெறும் கடாயில் மிதமான தணலில் நல்ல மணம் வரும் வரை வறுத்தால் நாம் அப்படியே உண்ண முடியும்.

ஆளி விதையில் உள்ள ‘ஒமேகா-3’ என்கிற முக்கிய கொழுப்புச்சத்து, ரத்தக் குழாய்களில் மற்ற கொழுப்புகள் படியாமலிருக்கச் செய்யும். அதனால் மாரடைப்பு வராமலிருக்க உதவும்.

குறிப்பு: கர்ப்பிணிகள் இதை உணவில் அதிகம் சேர்க்க வேண்டாமென கூறியுள்ளார்கள். அதிக நார்ச்சத்து இருக்கும் போது சரியாகத் தண்ணீர் அருந்தாவிட்டால், குழந்தை அழுத்தும் போது குடலில் இருந்து சீக்கிரம் வெளித்தள்ளப்படாமல் போகலாம். முன்பிருந்தே சாப்பிடாமல் திடீரென தினமும் உட்கொண்டால் வயிறு உப்புசம், வயிற்றில் சிறு வலி, ஒரு சிலருக்கு வாந்தி, பேதி அல்லது மலச்சிக்கல் வரலாம்.843 0946

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button