பெண்களே! வெள்ளைப்படுதல் அதிகமா இருக்கா? வெள்ளைப்படுதல் நோய்.!

♦வெள்ளைப்படுதல் நோய்.!

பெண்களின் பிறப்புறுப்பின் வழியே வெண்ணிறக் கசிவு வெளியேறுவதை வெள்ளைப்படுதல் நோய் (Leucorrhea) என்கிறோம்.

நுண்ணுயிர்த் தொற்று, சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று, கருப்பை வாய்ப்பகுதி வீங்குதல், கருப்பை மற்றும் யோனியில் புண், புற்றுநோய் போன்றவற்றால் வெள்ளைப்படும் நோய் ஏற்படலாம்.

சில சமயம் அந்தப் பகுதியில் நமைச்சலும் துர்நாற்றமும் ஏற்படும்.

பெண்களுக்கு வரும் தொற்று நோய்கள் யோனியில் அரிப்புடன் கூடிய வெள்ளைபடுதல் கெட்டியாக, நாற்றமில்லா, தயிர் போன்ற வெண் திரவம் வருதல், அரிப்பு, சிறுநீர் போகையில் எரிச்சல், புண்ணாகுதல், உடலுறவின் போது வலி, இவை அறிகுறிகள் ஆகும்.

பெண்ணுறுப்பில் சாதாரணமாக இருக்கும் கான்டிடா அல்பிகான்ஸ் எனும் காளானால் அதிக வளர்ச்சியால் விளையும் பொதுவான பெண்ணுறுப்பின் தொற்று பாதிப்பு தான்.

♦பேக்டீரியா வாஜினோஸிஸ்

நாற்றமுடைய, நீர்த்த, மஞ்சள் அல்லது வெள்ளைநிற திரவம் வெளியேறுதல், உடலுறவின் பின் நாற்றம் அதிகரித்து, அரிப்பும் எரிச்சலும் ஏற்படும்.

♦சாலமைடியல் தொற்று

இது சாலமைடியல் என்ற பேக்டீரியாவால் வரும் தொற்றுநோய். இந்த பாக்டீரியா, வைரஸ் போலவே சிறியது. வகையை சேர்ந்தது.

இதன் அறிகுறிகள்

மஞ்சள் நிற,

சளி
போன்ற திரவம் வெளியேறுதல்,

அடிக்கடி சிறுநீர் கழித்தல்,

சிறுநீர் கழிக்கையில் வலி,

அசாதாரணமான இரத்தப் போக்கு இவைகளாகும்.

டிரைகோமனியாசிஸ் வாஜினாலின் –

அரிப்பு,

சிறுநீர் கழிக்கையில் வலி,

அதிகமாக பச்சை மஞ்சள் நிற, நுரையுடன் கூடிய, மீன் நாற்றமுடைய திரவப்போக்கு

இவை அறிகுறிகள்.

இந்த நோய்களில் மிகவும் அதிகமாக காணப்படுவது.
வெள்ளைபடுதல்

பெண்களில் இனப் பெருக்க உறுப்புகளில் சுரப்பு என்பது இயற்கையான ஒன்றேயாகும்.

பெண்கள் இயற்கையான இயல்பான சுரப்பிற்கும் வெள்ளை படுதலுக்கும் உள்ள வித்தியாசங்களை உணர்வது அவசியம்.

எவ்வாறு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அளவுகளில் உடலில் வியர்வை உண்டாகின்றதோ அதே போல பெண்களின் பெண் உறுப்பில் சுரப்பு ஏற்படும்.

ஆனால் வெள்ளைபடுதல் என்பது அதிகமான வெள்ளை நிற அல்லது மஞ்சள் நிறமான அளவிற்கு அதிகமான சுரப்பினைக் குறிக்கும்.

வெள்ளைபடுதலுடன்……

பலஹீனம், இடுப்பு வலி, முதுகு வலி, மூட்டு வலி, உடல் சோர்வு சேர்ந்தே தோன்றும்.

இவை இருந்தால் மட்டுமே அது வெள்ளைபடுதலாகும்.

பல சமயம் அரிப்புடன் சேர்ந்து இருக்கும். துர்நாற்றம் வீசும் இதனால் திருமணமானவராக இருந்தால் கணவருக்கும் ஆணுறுப்பில் அரிப்பு ஏற்படும்.

இதற்கு அடிப்படை காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் பூசணம் பெண் உறுப்பில் வளர்வதேயாகும்.
இந்த பூசனம் தொற்றை உண்டாக்கும்.

அரிப்பு இல்லாத வெள்ளைபடுதல்,
கர்பமாக இருக்கும் பொழுதும் கருத்தடை மாத்திரைகள் உட்கொள்ளும் பொழுதும் நீரிழிவு நோய் உள்ள போதும் கூட ஏற்படும்.

அரிப்புடன்கூடிய வெள்ளைபடுதல்:-
பெண்ணுறுப்பில் சாதாரணமாக இருக்கும் கான்டிடா அல்பிகான்ஸ் எனும் காளானின் அதிக வளர்ச்சியால் விளையும் பொதுவான பெண்ணுறுப்பின் தொற்று பாதிப்பு தான்.
இதுஎதனால் ஏற்படுகிறது

குறைந்த நோய் எதிர்ப்பு, சக்தி பலவீனமான உடல் ஆரோக்கியம்.
இந்த காளான் வகை தொற்றுக்கிருமிகள் சளி, காய்ச்சல் முதலியவற்றுக்காக சாப்பிடும் ஆன்டிபயாடிக் மாத்திரைகளாலும் அதிகமாக வளர்ச்சி அரிப்புடன் கூடிய வெள்ளைபடுதல் உண்டாகிறது.

கர்ப்பம் அல்லது கருத்தடை மாத்திரைகளால் ஹார்மோன் அளவுகள் மாறி இந்த காளான்கள் வளர சரியான சூழ்நிலை உண்டாகிறது.

நீரிழிவு வியாதி, உடல் பருமன்.
இந்த கான்டிடா அல்பிகான்ஸ் காளான்கள் சாதாரணமாக குடலிலும் தோலிலும் இருக்கும். இங்கிருந்து இவை யோனிக்கு பரவும்.

இறுக்கமான, ஈரத்தை உறிஞ்சாத சுத்தமற்ற உள் ஆடைகள் காளானின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

சுகாதார குறைவு, வயிற்றில் பூச்சிகள்.
இந்த நோயின் அறிகுறிகள்
பெண்ணுறுப்பில் அரிப்பு, எரிச்சல்
யோனிலிருந்து அடர்த்தியான, தயிர்போன்ற வெள்ளை திரவ வெளியீடு
புண்படுவது – தேய்ப்பதினாலும், சொரிவதனாலும் அதிகரிக்கும்
உடலுறவின் போது வலி

விரல் நகங்களால் சொரியவோ அல்லது தேய்க்கவோ செய்யாதீர்கள்.

மிகச் சூடான நீரினால் கழுவ வேண்டாம்.

குளிக்கும் டவலால் கடுமையாக துடைத்து கொள்ளாதீர்கள்.

உடலுறவை சிகிச்சை பெறும் போது தவிர்க்கவும்.

அரிப்புடன் கூடிய வெள்ளைபடுதல் நோய்க்கு வாசனை அதிகமுள்ள சோப்புக்கள், குளிப்பதற்காக உபயோகிக்காதீர்கள்.

மன உளைச்சலை குறைக்கவும்.
உடற்பயிற்சி உதவும்.
இந்த வியாதி உடலுறவினால் பரவும் நோயல்ல.

இருந்தாலும் உடலுறவை தவிர்க்க முடியாவிட்டால் கணவரிடம் தெரிவிக்கவும் உடலுறவினால் அதிகரிக்கவும். கணவருக்கும் தொற்று பாதிப்பு வரலாம். உடலுறவை தவிர்ப்பது நல்லது.

வெள்ளைபடுதல் நிற்க:………

1. இளவறுப்பாய் வறுத்த வெந்தயப் பொடி (100 கி.)

கறி மஞ்சள் பொடி
(20 கி.).

பனங்கற்கண்டு பொடி (120 கி.)

இம்மூன்றையும் ஒன்றாகக் கலந்து அதிகாலை உணவுக்கு முன்னும், இரவு படுக்கும் முன்னும் 10-15 கிராம் அளவு பாலில் உண்டு வர சிறந்த பலன் கிடைக்கும்.

♦2. பெரு நெல்லிக்காய்ப் பொடி (100 கி.),

பனங்கற்கண்டு
(100 கி.).

இரண்டையும் ஒன்றாகக் கலந்து வைக்கவும். பின்பு ஒரு டம்ளர் பசும் பாலில் நாட்டுக் கோழிமுட்டை வெண்கருவை விட்டு நன்கு கலக்கிக் கொண்டு அதில் மேற்கண்ட கலவைப் பொடியை 10 கிராம் முதல் 15 கிராம் வரை கலந்து காலை, மாலை தொடர்ந்த உட்கொண்டு வர வெள்ளைப்படுதல் உடன் நிற்கும்.

சிறிது கடுக்காய் நெல்லிக்காய் தாண்றிக்காயை சம அளவு எடுத்துப் பொடி செய்து ( திரிபலா சூரணம்) அதனை 2 லிட்டர் தண்ணீரில் காய்ச்சி வைத்துக் கொண்டு மிதமான சூட்டில் பெண் உறுப்பை கழுவி வந்தால் வெள்ளைபடுதல் மறையும்.

மிகவும் குளிர்ந்த நீரில் 2 முறை தினசரி கழுவி வர வெள்ளைபடுதல் குறையும்.

சிறிது வெந்தயத்தை எடுத்து தூளாக்கி டீ போடுவது போல கஷாயமாகப் போட்டு காலை வெறும் வயிற்றில் தினசரி பருகி வர வெள்ளைபடுதல் மறையும்.

♦மணத்தக்காளி சூப்

சாதாரணமாக நமக்கு கிடைக்கும் மணத்தக்காளிக் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் பூண்டுப்பல் நான்கு, சின்ன வெங்காயம் 4, மிளகு 5, சீரகம் 1 ஸ்பூன் மற்றும் சிறிது கறிவேப்பிலை, கொத்துமல்லி, போட்டு சூப் செய்து தினமும் குடித்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

♦அருகம்புல்

கையளவு அருகம்புல்லை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி 4 கப் நீரில் கொதிக்க வைத்து நன்கு வற்றி 1 கப் ஆனவுடன் அதனுடன் மிளகுத்தூள் தேவைக்கேற்ப மற்றும் பனங்கற்கண்டு கலந்து காலை, மாலை இருவேளையும் 15 நாட்கள் சாப்பிட வெள்ளைப்படுதல் குணமாகும்.

அன்னாச்சி பழத்தை எடுத்து தோல் சீவி சுத்தம் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் குறையும்.

சிறிது கடுக்காய் நெல்லிக்காய் தான்றிக்காயை சம அளவு எடுத்துப் பொடி செய்து ( திரிபலா சூரணம்) அதனை 2 லிட்டர் தண்ணீரில் காய்ச்சி வைத்துக் கொண்டு மிதமான சூட்டில் பெண் உறுப்பை கழுவி வந்தால் வெள்ளைபடுதல் மறையும்.

மிகவும் குளிர்ந்த நீரில் 2 முறை தினசரி கழுவி வர வெள்ளைபடுதல் குறையும்.

(சிறிது வெந்தயத்தை எடுத்து தூளாக்கி டீ போடுவது போல கஷாயமாகப் போட்டு காலை வெறும் வயிற்றில் தினசரி பருகி வர வெள்ளைபடுதல் மறையும்.))

லோத்ரா பட்டையை நீரிலிட்டுக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு அந்த நீரால் காலை மாலை என இரு வேளை உறுப்பைக் கழுவி வர வெள்ளைபடுதல் கட்டுப்படும்.

கீழாநெல்லி இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து, தயிரில் கலந்து 10 நாட்கள் தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் உண்ணலாம்.

அம்மான்பச்சரிசி இலையை அரைத்துச் சுண்டைக்காய் அளவு எடுத்து, தயிரில் கலந்து பருகலாம்.
பொடுதலை இலையுடன், சம அளவு சீரகம் சேர்த்து அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.

கைப்பிடி அளவு வெள்ளருகுடன் 5 மிளகு, ஒரு பல் பூண்டு சேர்த்து அரைத்து மோரில் கலந்து அருந்தலாம்.

இரண்டு செம்பருத்தி பூவுடன், சிறு துண்டு வெண்பூசணி சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, சர்ககரை சேர்த்து அருந்தினால் ரத்தத்தோடு கூடிய வெள்ளைப்படுதல் குணமாகும்.

ஜவ்வரிசியை வேகவைத்துப் பால் சேர்த்து 10 நாட்கள் அருந்த, வெள்ளை, ரத்த வெள்ளை, சீழ்வெள்ளை ஆகியன குணமாகும்.

பொரித்த படிகாரம், மாசிக்காய், வால்மிளகு சம அளவு எடுத்துப் பொடித்து, அதில் கால் ஸ்பூன் எடுத்து வெண்ணெய் கலந்து சாப்பிட்டால் சீழ்வெள்ளை, ரத்த வெள்ளை குணமாகும்.

இளநீரில் ஒரு ஸ்பூன் சந்தனத்தூளை ஊற வைத்து, அந்த நீரை வடித்துப் பருகி வரலாம். .

திப்பிலி 5 பங்கு, தேற்றான் விதை 3 பங்கு கலந்து நன்றாய்ப் பொடித்து, அதில் 4 கிராம் எடுத்துக் கழுநீரில் 3 நாட்கள் சேர்த்து உண்ணலாம்.

ஓரிதழ் தாமரை இலை, யானை நெருஞ்சில் இலை இவற்றைச் சம அளவு எடுத்து அரைத்து, நெல்லிக்காய் அளவுக்கு எடுத்து மோரில் கலந்து அருந்தலாம்.

பரங்கிப்பட்டை, சுக்கு, மிளகு, நற்சீரகம் இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதில் அரை ஸ்பூன் எடுத்து தேங்காய் பாலில் கலந்து பருகலாம்.

சப்ஜாவிதைப் பொடி ஒரு ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.

ஒரு கைப்பிடி துத்தியிலையை இடித்து 4 பங்கு நீர் சேர்த்து 1 பங்காக வற்றவைத்து அதில் பால், சர்க்கரை கலந்து பருகலாம்.

சிறு துண்டு கற்றாழையைத் தோல் சீவி, கசப்பு நீங்கப் பத்து முறை நன்கு கழுவி சர்க்கரை சேர்த்து, தினமும் காலையில் சாப்பிட்டுவர வெள்ளை, ரத்த வெள்ளை, சீழ்வெள்ளை ஆகியன குணமாகும்.

விஷ்ணு கிரந்திவேர், ஆவாரை வேர்ப்பட்டை சம அளவு எடுத்து அரைத்து அதில் நெல்லிக்காய் அளவு எடுத்துப் பாலில் உண்ணலாம்.

தண்ணீர்விட்டான் இலையை அரைத்து 30 மி.லி. சாறு எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.
தென்னம்பூவை இடித்து, 30 மிலி சாறு எடுத்து, மோர் சேர்த்துப் பருகலாம்.

பொன்னாங்கண்ணி கீரைச் சாறு, கரிசலாங்கண்ணிச் சாறு, பசு நெய், பசும்பால் என ஒவ்வொன்றிலும் தலா 60 மிலி அளவுக்கு எடுத்து ஒன்றாகக் கலக்கி காய்ச்சி மெழுகு பதத்தில் இறக்கி, தினமும் காலை மாலை இரு வேளை ஒரு ஸ்பூன் (5 கிராம்) அளவுக்குச் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல், கை கால் எரிச்சல், பித்த மயக்கம் போன்ற பாதிப்புக்கள் குணமாகும்.

பசலைக் கீரைச் சாறு, யானை நெருஞ்சில் சாறு இரண்டையும் சம அளவு எடுத்து, 2 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, தினமும் காலை மாலை இரு வேளையும் சுமார் 60 மி.லி. அளவுக்குச் சாப்பிட்டு வந்தால், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்னை தீரும். ஆண்களுக்கு உண்டாகும் இந்திரீய ஒழுக்கும் குணமாகும்.

பொடுதலைக் கீரையுடன் சம அளவு வெள்ளெருக்கு சேர்த்து அரைத்து மூன்று சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து அதிகாலையில் வெறு வயிற்றில் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்னை நிரந்தரமாகத் தீரும்.

துத்திக்கீரை, கடுக்காய் (1) இரண்டையும் தட்டிப்போட்டு கஷாயமாக்கிச் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

பாலக் கீரை, சீரகம், பூண்டு ஆகியவற்றை அரைத்து 3 கிராம் அளவில் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்னை சரியாகும்.

பிண்ணாக்குக் கீரையைச் சாறு எடுத்து, அதில் கடுக்காய்த் தோலை ஊறப்போட்டு, பிறகு காய வைத்து எடுத்துப் பொடியாக்கிச் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

சுக்காங் கீரையைத் தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்னை தீரும்.

முக்குளிக் கீரைச் சாறில் தான்றிக்காய் தோலை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி சாப்பிட்டால், வெள்ளைப்படுதல் பிரச்னை தீரும்.

துயிலிக் கீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்னை தீரும்.

சாணாக்கிக் கீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்னை குணமாகும்.

மாதுளம் பூவை உலர்த்தி பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அந்த மாதுளம் பொடி, குங்குமப்பூ மற்றும் நாட்டுச் சர்க்கரையை சரிசம அளவில் எடுத்து, ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு தினமும் காலையில் வெறும் வயிற்றில், 1/2 டீஸ்பூன் சாப்பிட வேண்டும். ஒருவேளை வெள்ளைப்படுதல் தீவிரமாக இருந்தால், ஒரு நாளைக்கு 2-3 முறை உட்கொள்ள வேண்டும்.

தினமும் ஒரு பச்சை வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம், லுகோரியா பிரச்சனை நீங்கும். இல்லாவிட்டால், வாழைமரத்தின் வேரை 5-6 லிட்டர் நீரில் கொதிக்க வைத்து இறக்கி, வெதுவெதுப்பான பின் அந்நீரில் 20-25 நிமிடம் உட்காருங்கள். இதனால் யோனியில் ஏற்பட்ட தொற்றுகள் நீங்கும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1-2 துண்டு கடுக்காயை சாப்பிட்டால், பெண்கள் சந்திக்கும் அனைத்து விதமான பிரச்சனைகளும் சரியாகும். மேலும் இது மலச்சிக்கலையும் தடுக்கும்.

1/2 டீஸ்பூன் சர்பகந்தா பொடியை நீரில் கலந்து குடியுங்கள். இப்படி தொடர்ந்து 4-5 நாட்கள் குடித்து வந்தால், வெள்ளைப்படுதல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். மேலும் இந்த பொடி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

2-3 உலர்ந்த அத்திப் பழத்தை ஒரு டம்ளர் நீரில் இரவில் படுக்கும் முன் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து சாப்பிடுங்கள். இது யோனியில் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தையும் சரிசெய்யும்.

அஸ்பாரகஸ் பொடியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் நிறைந்துள்ளது. இவை வெள்ளைப்படுதல் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். அதற்கு இந்த பொடியை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும்.

1/2 டீஸ்பூன் நெல்லிப் பொடியை நீரில் கலந்து குடித்து வந்தால், வெள்ளைப்படுல் பிரச்சனை நீங்கும். இல்லாவிட்டால் மஞ்சள் தூள் மற்றும் நெல்லிப் பொடியை சரிசம அளவில் எடுத்து நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, யோனிப் பகுதியில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீர் அல்லது வேப்பிலை நீரால் கழுவுங்கள்.

கொட்டைப் பாக்கு பொடி வெள்ளைப்படுதல் அல்லது லுகோரியா பிரச்சனைக்கு தீர்வளிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே வெள்ளைப்படுதல் பிரச்சனை உள்ள பெண்கள் வெற்றிலைப் பாக்கு போடும் பழக்கத்தைக் கொள்வது நல்லது.

1 கட்டு அளவு மணத்தக்காளி இலைகளை எடுத்து அதனுடன் 5 சின்ன வெங்காயம், 5 பூண்டு பல், சிறிதளவு சீரகம் சேர்த்து நீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து கொதித்ததும் 1 தேக்கரண்டி மிளகுத்தூள் சிறிது கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு கலந்து மீண்டும் கொதிக்க வைத்து சூப் போல செய்து அடிக்கடி குடித்து வந்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் குறையும்.

சங்குப்பூ கொடியின் வேரைப் பாலில் நன்றாக அவித்து பிறகு பால் ஊற்றி அரைத்து சிறிது காலை, மாலை பாலில் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் மற்றும் சிறுநீர் எரிச்சல் ஆகியவை குறையும்.

வெந்தயம் பிஎச் அளவை அதிகரிக்கச் செய்யும். ஒரு ஸ்பூன் வெந்தயத்தைத் தண்ணீர் ஊற்றி இரவு முழுக்க ஊறவைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் அந்த தண்ணீரை வடிகட்டி, ஒரு ஸ்பூன் தேன் கலந்து, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

தினமும் ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், அதிக அளவிலான வெள்ளைப்படுதல் சரியாகும். ஜீரணக் கோளாறுகளும் உங்களை நெருங்கவே முடியாது.

ஒரு ஸ்பூன் இஞ்சிப் பொடியை இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு, கொதிக்க வேண்டும். அது ஒரு டம்ளராக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்னர் வடிகட்டி குடித்தால், வெள்ளைப்படுதல் பிரச்னையை மிக விரைவாகத் தீர்க்க முடியும்.

பத்து கெய்யா இலைகளை எடுத்து தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். 10 முதல் 15 நிமிடங்கள் வரை நன்கு கொதித்தபின் வடிகட்டி, குளிர வைக்கவும். அந்த தண்ணீரைக் கொண்டு, பிறப்புறுப்பைக் கழுவினாலும் வெள்ளைப்படுதல் குறையும்.

உணவு_முறைகள்:

வெள்ளைப்படுதல், நோய் மற்றும் கொழுப்பு சத்து உணவுகள் சர்க்கரை அதுவும் உங்கள் உடல் பருமனாக இருந்தால் இந்த உணவு வகைகளை தவிர்க்கவும்.

நிறைய பழங்கள், காய்கறிகள், தானியங்கள், சத்துள்ள பயறு வகைகள் சாப்பிடவும். தினமும் 6 லிருந்து 8 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்.

சேர்க்கவேண்டியவை 1உணவுகள் ;

தர்பூசணி, வெண்பூசணி, வெள்ளரி, வெந்தயம், பசலைக்கீரை, தண்டுக்கீரை, பருப்புக்கீரை, இளநுங்கு, நாட்டு வாழைப்பழம், நல்லெண்ணய், பனங்கிழங்கு.

தவிர்க்கவேண்டியவை 2உணவுகள் ;

மசாலா மற்றும் காரம் நிறைந்த உணவுகள். எண்ணெயில் பொரித்த உணவுகள், கோழி இறைச்சி.

Leave a Reply