சிற்றுண்டி வகைகள்

வெயில் காலத்தில் வெளியில் சென்று வந்த பின் முகத்திற்கு செய்ய வேண்டியவை

கோடை வெயிலில் சருமத்தின் நிறமோ நாளுக்கு நாள் கருமையாகிக் கொண்டே போகிறது. இத்தனை நாட்கள் காப்பாற்றி வந்த சருமம், கோடையில் நொடியில் கருமையாகிவிடும். வேலைப்பளு அதிகம் இருந்தாலும், அதனைப் பொருட்படுத்தாமல், சருமத்தின் நிறத்தை அதிகரிக்க பெண்கள் பல வழிகளை பின்பற்றி வருகின்றனர்.

எனவே கோடையில் கருமையாகும் சருமத்தின் நிறத்தை வெள்ளையாக மாற்ற சில அற்புதமான இயற்கை வழிகளை பட்டியலிட்டுள்ளது. இந்த இயற்கை வழிகள் அனைத்தும் பாதுகாப்பானவையே. ஆகவே அதைப் படித்து அவற்றை அன்றாடம் பின்பற்றி, உங்கள் சருமத்தின் நிறத்தை பாதுகாப்பதோடு, அதிகரித்துக் கொள்ளுங்கள்.

• பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும் செய்து வந்தால், முகத்தில் நல்ல மாற்றம் தெரியும்.

• வாழைப்பழத்தை மசித்து, அதில் பால் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், இரண்டே நாட்களில் முகத்தின் பொலிவு கூடியிருப்பதை நன்கு காணலாம்.

• ரோஸ் வாட்டரில் சிறிது பால் சேர்த்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் வெள்ளையாக பளிச்சென்று காணப்படும்.

• கற்றாழை ஜெல்லைக் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்து ஊற வைத்து கழுவி வந்தால், முகத்தில் வரும் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி, முகம் அழகாகவும், வெள்ளையாக மாறியிருப்பதையும் காணலாம்.

• மாம்பழத்தின் தோலை பால் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், சூரியக்கதிர்களால் கருமையான சருமம் வெள்ளையாகி பொலிவோடு மின்னும்.

• சர்க்கரையில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி, சரும துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமம் பொலிவோடு காணப்படும். முக்கியமாக தண்ணீர் குடிக்கும் அளவை அதிகரிக்க வேண்டும். தண்ணீர் அதிகம் குடிப்பதால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, சருமம் பொலிவோடு காணப்படும். அதிலும் தினமும் குறைந்தது 10 டம்ளர் தண்ணீரை அவசியம் குடிக்க வேண்டும்.
How A Beautiful Girls Face Attracts The Men

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button