ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா சர்க்கரை நோயை குணப்படுத்தும் கிச்சடி

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு சேமியா – 1 பாக்கெட்
வெங்காயம் – 1
கேரட் – 1
உருளைக்கிழங்கு – 1
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
பீன்ஸ் – 6
பச்சை பட்டாணி – 1/4 கப்
தக்காளி – 1
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

வெங்காயம், தக்காளி, கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கேழ்வரகு சேமியாவை வெதுவெதுப்பான நீரில் ஒருமுறை அலசி, பின் இட்டி தட்டில் வைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.

1306985848015d06377b154f591d611af9d82155c698795254

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி குழைய வதங்கியதும் அதில் அனைத்து காய்கறிகளையும் சேர்த்து, உப்பை தூவி 3 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும். பின்னர் காய்கறிகள் வேக சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேக விடவும். காய்கறிகள் வெந்ததும் அதில் வேக வைத்துள்ள கேழ்வரகு சேமியா, கொத்தமல்லியை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான கேழ்வரகு கிச்சடி ரெடி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button