ஆரோக்கியம்கர்ப்பிணி பெண்களுக்கு

உங்களுக்கு தெரியுமா கருப்பையில் பனிக்குடம் எதனால் உடைகின்றது.?!

குழந்தையைச் சுற்றி கருப்பையின் உள்ளே அம்நியோட்டிக் திரவம் (Amniotic fluid) ஒரு மெல்லிய சவ்வு போல சூழ்ந்து குழந்தையை பாதுகாக்கின்றது. சில அமுக்க விசைகளில் இருந்தும் இந்த சவ்வானது குழந்தையைப் பாதுகாக்க உதவுகின்றது.

இந்தத் திரவத்தைச் சுற்றி அம்நியோட்டிக் மென்சவ்வு (amniotic membrane) இருக்கின்றது. இந்த மென்சவ்வானது பிரசவம் ஆரம்பித்த பின்னே உடைகின்றது. ஆனால், சிலருக்கு இது அதற்கு முன்பே உடையக்கூடும். இது Pre labour rupture of membrane எனப்படுகின்றது.

இந்த காரணமாக குழந்தையைச் சுற்றி இருக்கும் திரவ நீர் வெளியேறும் அதோடு, கருப்பையின் உள்ளே கிருமிகள் சென்று குழந்தைக்கும், தாய்க்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். பனிக்குடம் உடைந்ததற்கான அறிகுறிகளாக திடீரென பிறப்புறுப்பு வழியாக திரவம்(நீர் வெளியேறுதல்) வெளியேறும்.
gyuyu
இப்படி திடீரென நீர் வெளியேறினால் அந்த கர்ப்பிணியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். ஆனால், 32 வார கர்ப்ப காலத்திற்கு முன்பே இது நடந்தால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அந்த பெண் 32 வாரம் வரை கண்காணிக்கப்பட்டு அதன் பிறகு குழந்தை பிறப்பு தூண்டப்படும்.

ஆனாலும், அதற்கு முன் கருப்பையினுள் தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள் இருந்தால் தொப்புள் கோடி கீழிறங்குவது போல் இருந்தாலோ உடனடியாக பிறப்பு தூண்டப்படும். இந்த நிலைகள் யாருக்கு ஏற்படும் என்பது கணிக்க முடியாது. ஆனால், ஏற்கனவே குறை மாதத்தில் குழந்தை பெற்றவர்களுக்கு இது ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button