ஆரோக்கிய உணவு

முயன்று பாருங்கள் உள்ளுறுப்பு கொழுப்புக்களைக் கரைக்க உதவும் ஓர் எளிய வழி!

பெரும்பாலான மக்கள் பானைப் போன்ற வயிற்றுடன் பெரும் அவஸ்தைப்பட்டு வருகிறார்கள். இத்தகைய வயிற்றைக் குறைக்க எவ்வளவோ முயற்சித்தும், எந்த பலனும் கிடைக்காமல் வேதனையில் உள்ளனர்.

ஒருவரது அடிவயிற்றுப் பகுதியில் அதிகளவு கொழுப்புக்கள் தேங்கினால், இதயம் மற்றும் சிறுநீரக செயலிழப்பின் அபாயம் அதிகரிப்பதோடு, உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் பல வகையான புற்றுநோயின் அபாயமும் அதிகரிக்கும்.

இந்த பிரச்சனைக்கு ஓர் எளிமையான தீர்வைக் கொடுக்கும் ஓர் அற்புத பொருள் உள்ளது. அந்த பொருள் வயிற்றில் உள்ள கொழுப்புக்களை குறைந்த காலத்தில் நீக்க உதவும். அது வேறொன்றும் இல்லை கொடிமுந்திரி தான். உடலிலேயே அடிவயிற்றுப் பகுதியில் தேங்கும் கொழுப்புக்கள் தான் மிகவும் ஆபத்தானது மற்றும் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடியது. இத்தகைய கொழுப்புக்களைத் தான் உள்ளுறுப்பு கொழுப்பு என்று அழைப்பர்.
hjh
உள்ளுறுப்பு கொழுப்புகள் எண்டோமெட்ரியல், சிறுநீரகம், குடல் மற்றும் உணவுக்குழாய்க்குரிய புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை. ஆகவே அடிவயிற்றில் உள்ள கொழுப்பைக் கரைக்க முயற்சிக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

கொடிமுந்திரி

கொடிமுந்திரியில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்து போன்றவை அதிகம் உள்ளதால், இது நல்ல மளமிளக்கும் பொருளாக செயல்படும். மேலும் இந்த பழம் சர்க்கரை மற்றும் கொழுப்புக்களை வளர்சிதை மாற்றம் புரிவதை மேம்படுத்த உதவும். அதுமட்டுமின்றி, இது உடலை சுத்தம் செய்யக்கூடியது மற்றும் நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும்.

சரி, இப்போது இந்த கொடிமுந்திரியை எப்படி உட்கொண்டால், அடிவயிற்றில் உள்ள உள்ளுறுப்பு கொழுப்புக்களைக் கரைக்க முடியும் என்பது குறித்து காண்போம்.

தேவையான பொருட்கள்:

* கொடிமுந்திரி – 100 கிராம்

* தண்ணீர் – 1 லிட்டர்

gjgj
தயாரிக்கும் முறை:

கொடிமுந்திரியை கண்ணாடி பாட்டிலில் போட்டு, அதில் நீரை ஊற்றி மூடி, ஒரு வாரம் ஃப்ரிட்ஜில் வைத்திருக்க வேண்டும். பின் அந்த பாட்டிலை வெளியே எடுத்து, பிளெண்டரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதை காலை உணவிற்கு முன் ஒரு கப் சாப்பிட வேண்டும். இப்படி தொடர்ந்து 2 நாட்கள் உட்கொண்டு வந்தால், 3-4 நாட்களில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். இது வயிற்றுக் கொழுப்பைக் கரைக்கும் ஓர் அற்புதமான வழியாக கருதப்படுகிறது.

எடை இழப்பில் கொடிமுந்திரி

கொடிமுந்திரி கொழுப்பைக் கரைக்கும் சிறந்த பொருளாக இருப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது, இதில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது மற்றும் நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். இதனால் அடிக்கடி ஏதேனும் சாப்பிடும் உணர்வு குறையும். எனவே தான் உடல் எடை மற்றும் தொப்பையைக் குறைக்க உதவும் சிறந்த பொருளாக கொடிமுந்திரி கருதப்படுகிறது.

இப்போது கொடிமுந்திரியின் இதர நன்மைகளைக் காண்போம்.

நன்மை #1

கொடிமுந்திரியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. ஆகவே ஒருவர் இப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டால், உடலைத் தாக்கும் ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடும் திறன் அதிகரிக்கும்.

நன்மை #2

பொட்டாசியம் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களுள் ஒன்று தான் கொடிமுந்திரி. இந்த பழத்தை உட்கொண்டால், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு சிறுநீரின் வழியே வெளியேற உதவும். இதனால் உடலில் நீர்தேக்கத்தால் ஏற்படும் வீக்கம் தடுக்கப்படும்.

நன்மை #3

கொடிமுந்திரியில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இது இரத்த சர்க்கரை அளவை சீராக்கும். மேலும் இது இரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் அளவைப் பராமரிக்கும் மற்றும் இதய நோயின் அபாயத்தைத் தடுக்கும். எனவே அவ்வப்போது கொடிமுந்திரியை ஸ்நாக்ஸ் வேளையில் சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

நன்மை #4

கொடிமுந்திரி உடலுக்கு ஆற்றலை அதிகம் வழங்கக்கூடியது. ஏனெனில் இதில் நார்ச்சத்து, புருக்டோஸ் மற்றும் சார்பிட்டால் போன்றவை ஏராளமான அளவில் உள்ளது. இச்சத்துக்கள் இரத்த சர்க்கரை அளவு சட்டென்று அதிகரிக்காமல் தடுக்கும்.

நன்மை #5

மலச்சிக்கலால் அடிக்கடி அவஸ்தைப்படுபவர்கள், கொடிமுந்திரியை சாப்பிட மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். இதற்கு இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் மலமிளக்கும் பண்புகள் தான் காரணம். ஆகவே நீங்கள் தினமும் மலம் வெளியேற்றாமல் இருந்தால், கொடிமுந்திரியை சாப்பிடுங்கள். இதனால் உடலில் உள்ள கழிவுகள் சிக்கலின்றி அன்றாடம் வெளியேற்றப்படும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button