ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் கற்றாழை சாறு

உடலுக்கு ஆரோக்கியமான ஜூஸ் அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு சிறந்த ஒன்றாக விளங்குகிறது கற்றாழை ஜூஸ். இந்த கற்றாழை ஜூஸில் கொஞ்சம் பூண்டு சாறு கலந்து குடித்தால் நம் உடலுக்கு அதிக அளவு ஆரோக்கியத்தை தருகிறது. நம் உடலில் உள்ள நச்சுகிருமிகளின் தாக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

தேவையான பொருட்கள்: கற்றாழை சாறு – 2 டேபிள் ஸ்பூன், பூண்டு சாறு – 2 டீஸ்பூன்.

செய்முறை:

மிக்ஸியில் கற்றாழை சாறு மற்றும் பூண்டு சாறு சிறிதளவு மற்றும் தண்ணீர் ஊற்றி ஒரு முறை அடித்தால் கற்றாழை பூண்டு ஜூஸ் தயார். இந்த ஜூஸை வாரத்தில் 5 முறை குடிக்கலாம். இதை குடித்து வர நம் உடலை தாக்கும் பல வகையான நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் உள்ளவர்கள் தினமும் ஒரு டம்ளர் கற்றாழை ஜூஸை குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அழிக்க உதவுகிறது. அது மட்டுமின்றி உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையில் இருந்து விடுபெறலாம்.

சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் கற்றாழை ஜூஸை குடித்து வந்தால் நாசி துவாரங்களில் உள்ள நோய்த்தொற்றுகள் மற்றும் உட்காயங்கள் குறையும் மற்றும் சைனஸ் நோய் பிரச்சனைகளும் குணமாகும்.

கற்றாழை ஜூஸ் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்க உதவுகிறது. அதனால் காய்ச்சல் ஏற்படும் போது ஒரு டம்ளர் அளவு கற்றாழை ஜூஸ் குடித்தால் காய்ச்சல் உண்டாக்கும் நோய்த்தொற்றுகளை அழித்து உடலை பாதுகாக்கும்.

கற்றாழை பூண்டு ஜூஸை இரத்தம் அழுத்தம் உள்ளவர்கள் தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம். மேலும் தினமும் கற்றாழை ஜூஸை ஒரு டம்ளர் குடித்த வந்தால் ஞாபக மறதி பிரச்சனை ஏற்படுவதை தடுக்க உதவுகிறது.

Related posts

தயிர் நெல்லிக்காய்

nathan

ஆலிவ் ஆயிலை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் 7 நன்மைகள்!

nathan

கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான 10 முக்கிய காரணங்கள்!!!

nathan

Leave a Comment

%d bloggers like this: