ஆரோக்கிய உணவு

அவதானம்! தாய்ப்பால் கொடுக்கும் போது இதை சாப்பிடாதீர்கள்.! குழந்தைக்கு ஏற்பட வாய்ப்பு .!

பொதுவாக பிரசவத்திற்கு முன்னும் ,பிரசவத்திற்கு பின்னர் எந்த மாதிரியான உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை கேட்டு பல பெண்கள் உணவு சாப்பிட்டு வருகின்றன.

இந்நிலையில் குழந்தைக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் தாய்ப்பால் அந்த தாய்ப்பால் கொடுப்பதற்கு முன் எந்த மாதிரியான உணவுகளை பெண்கள் எடுத்துக் கொள்வது என்பதை பற்றி பார்க்கலாம்.ஏனென்றால் சில உணவு வகைகளை குழந்தைக்கு அலர்ஜியை கொடுக்கின்றன எனவே தாய்ப்பால் கொடுக்கும்போது சில உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

265342131fa5a3884d113e49ad39797335f9c24f7 690881462

ப்ரோக் கோலி :

இது செரிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதனால் செரிக்க நேரம் எடுத்து கொண்டால் உங்களுக்கும் , உங்கள் குழந்தைக்கு வாயு தொல்லையை ஏற்படுத்திவிடும்.

செர்ரிப்பழம்:

செர்ரிப்பழத்தில் இயற்கையை மெழுகு பொருள் இருக்கும். இது மலச்சிக்கல்லுடன் கூடிய வாயு தொல்லையை குழந்தைக்கு ஏற்படுத்தும்.

வேர்கடலை:

சில குழந்தைகளுக்கு உணர்வு திறன் மற்றும் ஒவ்வாமை பிரச்சனையை ஏற்படுத்தும். இருப்பினும் இதில் அதிக அளவில் புரதச் சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இதில் பாதிக்கு பாதி வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கையாகவும் செயல்படுவதே சிறந்தது.

காபி:

காபியின் அளவைக் குறைத்து விடுங்கள் முடிந்தவரை காபி குடிப்பதை தவிர்க்கவும். இதில் இருக்கும் காபின் தாய்ப்பாலில் சேரும்போது குழந்தையின் சிறிய உடலால் செரிக்கவும் , வெளியேற்ற முடியாததால் குழந்தையின் உடலிலேயே தங்கி விடும். இதனால் குழந்தைக்கு எரிச்சல், வாயு தொல்லை ஏற்படும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button