ஆரோக்கிய உணவு

சூப்பர் டிப்ஸ்! காய்கறிகள் வாடாமல் இருக்க இப்படி செய்யுங்கள்…!!

கோதுமையை நன்கு கழுவி, நான்கு மணி நேரம் ஊற வைத்து, உலர்த்தி பின் மிஷினில் அரைத்து சப்பாத்தி செய்தால் மிகவும் மிருதுவான சப்பாத்தி கிடைக்கும்.

தேங்காயை துண்டுகளாக வெட்டி, ஒரு மணி நேரம் ஃப்ரீஸரில் வைத்து விடுங்கள். பின்னர் மிக்சி ஜாரில் போட்டு தண்ணீர் விடாமல் சில விநாடிகள் சுற்றினால், துருவியது போலவே பூப்பூவாக வந்துவிடும்.

வாழைப்பூ, வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கினால் உடனே அவற்றை மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். இதனால் வாழைப்பூ, வாழைத்தண்டின் நிறம் மாறாது, கறை பிடிக்காது, துவர்ப்பு நீங்கும்.

105570429e4e9386319e3e3fae7b32575340cbcef 1614720576

காய்கறிகள் வாடிவிட்டால் தூக்கி எறியாமல் அதில் சில துளி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்துவிட்டால், சில மணி நேரத்தில் காய்கறிகளின் வாடிய தன்மை மாறி புதியதாக இருக்கும்.

பாலாடை, தயிராடைகளை பாட்டிலில் போட்டு குலுக்க வெண்ணெய் மற்றும் மோர் ஒரே சமயத்தில் கிடைக்கும்.

கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையை வாங்கியவுடன் வாழைப் பட்டையில் சுற்றி வைக்கும்போது வாடாமல் இருக்கும்.

வெந்தயக்கீரையை சமைக்கும்போது சிறிது வெல்லம் சேர்த்தால் அதிலுள்ள கசப்பு சுவை நீங்கிவிடும்.

இட்லிக்கு மாவு அரைக்க, சுடு தண்ணீரில் அரிசியை ஊற வைத்தால் பத்து நிமிடத்தில் அரிசி ஊறிவிடும்.

காபி, டீ கொடுக்கும் பீங்கானில் கறை படிந்தால் ஒரு பெரிய வெங்காயத்தினை வெட்டி நன்கு தேய்ந்தால் கறைகள் போய்விடும்.

பிளாஸ்கில் உள்ள துர்நாற்றம் போக வினிகர் போட்டு கழுவலாம்.

வாழைக்காயை நறுக்கும் முன் கைகளில் உப்பு தூளை தடவிக் கொண்டால் கைகளில் பிசுபிசுப்பு ஒட்டாது.

கேரட் அல்வா செய்யும்போது கேரட்டை கொதிக்கும் நீரில் போட்டு, பின்பு குளிர்ந்த நீரில் சிறிது நேரம் வைத்துவிட்டு தோலை சீவினால் மிகச் சுலபமாக தோல் நீங்கிவிடும்.

புதினா, தக்காளி இரண்டையும் நன்கு அரைத்து பஜ்ஜி மாவுடன் கலந்து செய்தால் பஜ்ஜி மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.

துவையல் அரைக்கும்போது வழக்கமாக வைத்து அரைக்கும் பொருட்களுடன் வறுத்த பயறு வகைகள் சேர்த்து அரைத்தால் சுவை கூடும்.

எலுமிச்சை ஊறுகாய் போடும்போது ஓரிரு இஞ்சித் துண்டுகளை வதக்கி அதனுடன் போட்டு வைத்தால் ஊறுகாயின் சுவை கூடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button