ஆரோக்கிய உணவு

உங்களுக்கு சீக்கிரம் தொப்பையை குறைக்கணுமா? இதோ எளிய நிவாரணம்….

இன்றைய காலகட்டத்தில் நம் அனைவருக்குமே உடல் பருமன் தான் மற்ற நோய்களுக்கு காரணமாக மாறிவிட்டது.

இதற்காக என்னத்தான் கடின டயட்களை மேற்கொண்டாலும் எளிதில் இது யாருக்கு நிரந்த தீர்வை தருவதில்லை.

இருப்பினும் சில கால்சியம் நிறைந்த உணவுகளை மற்றும் டயட்டில் சேர்த்து கொண்டால் உடல் பருமனை குறைக்க முடியும் என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

அந்தவகையில் பாலில் கால்சியம் அதிகம் உள்ளதால் இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் பால நன்மை பயக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.

இது உடலில் உள்ள கொழுப்பு தேக்கத்தைத் தடுக்க உதவும். மேலும், பால் டயட் கலோரி அளவைக் குறைத்து, உடல் எடை வேகமாக குறைய உதவுவதாக நம்பப்படுகிறது.

அதோடு பால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுப்பதோடு, பசியைக் கட்டுப்படுத்தும். மேலும் இது அன்றாட செயல்பாட்டை செய்யத் தேவையான ஆற்றலையும் வழங்கும்.

மேலும் இந்த டயட்டை மூன்று வாரங்கள் பின்பற்றினால் போது விரைவில் உடல் பருமன் குறைவதை நாம் பார்க்க முடியும். தற்போது இந்த டயட்டை எப்படி கடைப்பிடிப்பது என்பதை பார்போம்.milkdiet 15745

முதல் வாரம்

அதிகாலை: ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் 1 ஸ்பூன் தேன் மற்றும் பாதி எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

காலை உணவு: ஒரு டம்ளர் கொழுப்பு நீக்கப்பட்ட பால், 1 வேக வைத்த முட்டை மற்றும் 1 முழு தானிய பிரட்.

மதிய உணவு: ஒரு டம்ளர் வெஜிடேபிள் ஸ்மூத்தி, ஆலிவ் ஆயில் சேர்த்து தயாரிக்கப்பட்ட சிக்கன் அல்லது டூனா சாலட்.

மாலை: ஒரு டம்ளர் கொழுப்பு நீக்கப்பட்ட பால்

இரவு உணவு: சிறிது எண்ணெய் சேர்த்து வதக்கப்பட்ட காய்கறிகள் அல்லது க்ரில் மீன்

இரவு தூங்கும் முன்: ஒரு டம்ளர் கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடிக்கவும்.

இரண்டாம் வாரம்

அதிகாலை: சர்க்கரை சேர்க்காத 1 கப் க்ரீன் டீ.

காலை உணவு: ஒரு டம்ளர் கொழுப்பு நீக்கப்பட்ட பால், 1 வாழைப்பழம் மற்றும் 1 வேக வைத்த முட்டை

மதிய உணவு: க்ரில் மீன் மற்றும் 2 சப்பாத்தி.

மாலை: 4 மணியளவில் 1 டம்ளர் கொழுப்பு நீக்கப்பட்ட பால்

இரவு உணவு: ஒரு பௌல் சிக்கன் சூப் அல்லது க்ரில் காளான் மற்றும் காய்கறிகள்

இரவு தூங்குவதற்கு முன்: 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கப்பட்ட ஒரு கப் கொழுப்பு நீக்கப்பட்ட பால்.

மூன்றாவது வாரம்

அதிகாலை: 1 கப் வெதுவெதுப்பான நீரில் ஒரு எலுமிச்சையைப் பிழிந்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து குடிக்கவும்.

காலை உணவு: 1 கப் கொழுப்பு நீக்கப்பட்ட பால், 2 வேக வைத்த முட்டை மற்றும் 4 ஊற வைத்த பாதாம் அல்லது 1 டம்ளர் கொழுப்பு நீக்கப்பட்ட பாலை 1/2 பௌல் ஓட்ஸ் மற்றும் 1 டீஸ்பூன் தேனுடன் ஒன்றாக கலந்து உட்கொள்ள வேண்டும்.

மதிய உணவு: க்ரில் மீனுடன் ஃபுரூட் சாலட் அல்லது 1/2 கப் பாலுடன் க்ரில்டு வெஜிடேபிள் சாண்விட்ச்.

மாலை: 3-4 பாதாமை நீரில் ஊற வைத்து வைத்து, ஒரு டம்ளர் கொழுப்பு நீக்கப்பட்ட பாலுடன் சேர்த்து கலந்து குடிக்கவும்.

இரவு உணவு: காளான் க்ளியர் சூப் அல்லது வதக்கிய காய்கறிகள் மற்றும் டோஃபு.

இரவு தூங்குவதற்கு முன்: ஒரு கப் கொழுப்பு நீக்கப்பட்ட பாடலுடன் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடிக்கவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button