ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா எல்லா நேரத்திலும் நெய் ஊற்றி சாப்பிட்டால் அவ்வளவு தான்..!!

பருப்பு சாதம் முதல் தோசை வரை அனைத்திலும் நெய் ஊற்றி சாப்பிடுவதே அதிக சுவை ஆகும். இனிப்பு உணவுகளில் சேர்க்கப்படும் சுத்தமான பசு நெய் அதற்கு சுவையினையும் மணத்தையும் கொடுக்கிறது.

நெய் சாப்பிட்டால் உடலில் கொழுப்பு சேரும் என்று கூறுகின்றனர். ஆனால் இது தவறான கருத்தாகும். சுத்தமான பசு நெய் உடலுக்கு நன்மை தரக் கூடியது. சுத்தமான பசு நெய் நல்ல மணமாக இருக்கும். பசு நெய்யுடன் கலக்கப்படும் எருமை நெய் உடலின் கொழுப்பினை அதிகரித்துவிடும்.

162293159d2906ab26007e91f49c90e0b47ffc13c4530022489182817799

பலன்கள் :

நாட்டுப்பசுவின் நெய்யில் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. இது உடலுக்கு நன்மையை தரக்கூடியது. மூளை நரம்புகளை சுறுசுறுப்பாக்க, செயல்திறனை அதிகரிக்க நெய் உதவுகிறது.

அல்சீமர், மன அழுத்தம் என்னும் மூளை தொடர்பான பிரச்சனை உள்ளவர்களுக்கு தயாரிக்கப் பயன்படும் ஆயுர்வேத மருந்துகளில் பசு நெய் முக்கிய பொருளாக பயன்படுகிறது.

நெய் சேர்த்து சாப்பிடவேண்டிய உணவுகள் :

பாசிப்பருப்பு, துவரம் பருப்பு போன்ற பருப்புகளுடன் நெய் சேர்த்து பயன்படுத்தலாம். பருப்பில் உள்ள புரதத்துடன், கொழுப்பு சேர்ந்து குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தினை அளிக்கிறது.

சாம்பார் தாளிக்க, புளிக்குழம்பு, கூட்டு போன்றவற்றுக்கு நெய்யைப் பயன்படுத்தலாம். சு+டான சாதத்துடன் நெய் சேர்த்து உண்ணலாம்.

பாதாம், பிஸ்தா, முந்திரிப் பருப்பு போன்றவற்றை நெய்யில் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். பாயசம், அல்வா, கேசரி போன்ற உணவுகளில் நெய் சேர்த்து சாப்பிடலாம்.

நெய் எப்படி சாப்பிடவேண்டும்?

மதிய உணவில் மட்டுமே சிறிது நெய்யினை சேர்த்து கொள்ளவேண்டும். இரவில் நெய் சேர்த்து சாப்பிட்டால் செரிமான பிரச்சனை ஏற்படும்.

சூடான சமைத்த உணவில் மட்டுமே நெய்யினை சேர்த்து சாப்பிடவேண்டும். பிரிட்ஜில் வைத்த உணவுகளில் நெய் சேர்த்து சாப்பிடக்கூடாது.

பிரியாணி, சிக்கன், மட்டன், முட்டை, மீன் போன்ற அசைவ உணவுகளில் கட்டாயம் நெய் சேர்க்கக்கூடாது.

செரிமான பிரச்சனை, வாயு கோளாறு, வாந்தி வரும் உணர்வு இருப்பவர்கள் நெய் ஊற்றி சாப்பிடுவதனை தவிர்க்கவேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button